இந்தியாவை வெல்ல துடிக்கும் இலங்கை அணி - வெளியேறிய முக்கிய நட்சத்திர வீரர்கள்;
இந்திய அணியில் சுற்றும் பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போடிகளிலும் தோற்று சோகத்துடன் வெளியேறியது.
இந்திய அணி இதனால் டி20 தொடரில் மீண்டும் முதல் இடத்தை தக்கவைத்து அசத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
தொடர்ந்து மண்ணை கவ்வி வரும் இலங்கை பலம் வாய்ந்த இந்திய அணியை வெல்ல தீவிர பயிற்ச்சியிலும் ஈடுப்பட்டு வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை இரவு லக்னோவில் நடைபெறவிருக்கிறது.
பலம் வாய்ந்த இந்திய அணியில், இடம்பிடிக்க ஒவ்வொரு வீரர்களும் போராடும் நிலையில், காயம் காரணமாக சில வீரகள் வெளியேறி வருவது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இலங்கை தொடரில் ஏற்கனவே விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட்க்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், இதே போல துணைக்கேப்டன் கே.எல்.ராகுலும் காயம் காரணமாக வெளியேறினார்.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அட்டகாசமாக பவுலிங் வீசிய தீபக் சஹார் தசைநார் கிழிவு காரணமாக தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
இவர்களை எல்லாம் விட, தற்போது செம்ம ஃபார்மில் உள்ள சூர்ய குமார் யாதவ் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார்.
இருந்தாலும், மிடில் ஆர்டரில், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, இஷான் கிஷன், ருதுராஜ், ரோகித் என இந்த படைகளே நல்ல பார்மில் உள்ளதால், பெரிய பின்னடவைவாக இருக்காது என கூறப்படுகிறது.
Prep mode ? #TeamIndia hit the ground running as they gear up for the @Paytm #INDvSL T20I series. ? ? pic.twitter.com/pcRxQYiJMw
— BCCI (@BCCI) February 22, 2022