காதலனுடன் உல்லாசமாக ஊர் சுற்றும் தமன்னா! இணையவாசிகளின் கையில் சிக்கிய வீடியோ!
பொலிவூட் நடிகருடன் நடிகை தமன்னா காதல் கொண்டுள்ளதாகவும் அடிக்கடி அவருடன் வெளியில் சென்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் அதற்கு ஆதரமாக இணையவாசிகளிடம் வீடியோ காட்சி ஒன்று அதிகம் பரவி வருகிறது.
நடிகை தமன்னா
தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் தமன்னா. அதனைத் தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சுறா, அயன், சிறுத்தை, பையா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்தும் தனக்கென தனி தனி மொழி ரசிகர்களை ஒன்றாக சேகரித்திருக்கிறார்.
அதிலும் பிரமாண்டத் திரைப்படமாக எடுக்கப்பட்ட பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். தற்போது சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகருடன் காதல்
இந்நிலையில் 33 வயதான தமன்னா இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் தான் இருக்கிறார். இவரையும் விட்டு வைக்காத இணையவாசிகள் அவ்வப்போது திருமணம் எப்போது, யாரையாவது காதலிக்கிறீர்களா? என தொடர்ந்து கேட்டுக் கொண்டே வந்தனர்.
இவ்வாறு பல கேள்விகளை கேட்டு வந்தவர்களுக்கு தீனி போடும் பதிலாக இணையத்தில் ஒரு வீடியோ அதிகம் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் பொலிவூட் நடிகராக இருக்கும் விஜய் வர்மாவுடன் இரவு நேரத்தில் காரி ஏறி பயணிக்கும் வீடியோ தான் அது.
இது மட்டுமல்லாமல் இதற்கு முன்னரும் தமன்னா விஜய் வர்மாவிற்கு முத்தம் கொடுத்த காட்சியும் வைரலானது. இதைப்பற்றி தமன்னாவிடம் கேட்க அவர் இதனை மறுத்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.