தமன்னாவின் பால்போன்ற வெண்மைக்கு இது தான் காரணமா? அவரே கூறிய ரகசிய டிப்ஸ்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் தமன்னா தன்னுடைய அழகின் இரகசியத்தை அப்பட்டமாக கூறியுள்ளார்.
சினிமா வாழ்க்கை
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னிலையில் இருக்கும் கதாநாயகிகளில் தமன்னாவும் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணியிலிருக்கும் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
இவரின் அழகை பார்த்து வியக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அந்தளவு அழகு நிறைந்த ஒரு நடிகை.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் வித்தியாசமான உடைகள் அணிந்து போட்டோ ஷீட்கள் செய்து புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
காதல் சர்ச்சை
இதனை தொடர்ந்து இவரின் உடை பல இடங்களில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆனால் தமன்னா தரப்பிலிருந்து பெரியளவில் எந்தவிதமான பதிலும் வராது. அந்தளவு பிர்ச்சினைகளை இலகுவாக சமாளிக்கக்கூடிய நடிகையாக இன்று வரை திரையுலகில் இருந்து வருகிறார்.
மேலும் சமீபக்காலமாக இவர் இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போவதாகவும் வதந்திகள் பரவி வந்தது.
இது குறித்து எந்தவிதமான தகவலும் வெளியிடாத நிலையில் தற்போது அவரின் ரசிகர்களுக்காக அழகு குறிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமன்னாவின் அழகின் இரகசியம்
அந்த வீடியோவில், “சந்தனம், காபி தூள், தேன் ஆகியவற்றை கலந்து முகத்தில் தினமும் தடவி வந்தால் முகம் பளபளவென்று இருக்கும்.
மேலும் தயிர் மற்றும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தினால் முகம் ஜொலிக்கும் எனவும் டிப்ஸ் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இது அவரின் தாய் சொல்லிக் கொடுத்த டிப்ஸ் என்றும் ரசிகர்களை பின்பற்றுமாறும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இவரின் காதலுக்கு முடிவு கூறாமல் அழகு குறிப்பு கூறிக் கொண்டிருக்கிறார் என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவேற்றி வருகிறார்கள்.