இவ்வளவு வருஷமா தமன்னா எப்படி ஃபிட்டா இருக்காங்க தெரியுமா? இதுதான் அந்த சீக்ரெட்
தமன்னா எப்போதும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக ஃபிட்டாக வைத்திருப்பார். இது குறித்து சீக்ரெட் தற்போது வெளியாகியுள்ளது.
தமன்னா
நடிகை தமன்னா கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்தார்.
இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சமீபகாலமாக தமன்னா குறித்து காதல் கிசுகிசுக்கள் அதிகம் பரவி வருகின்றன. இருப்பினும் இதற்கு செவிசாய்க்கமால் இவர் சென்று கொண்டே உள்ளார்.
தமன்னாத நடிக்கத் தொடங்கியதில் இருந்து தற்போது வரை பத்து வருடங்களுக்கும் மேலாக கொஞ்சமும் உடல் ஃபிட்னஸில் மாற்றமில்லாமல் ஃபிட்டாக வைத்திருக்கிறார்.
அதற்காக அவர் தன்னுடைய டயட் மற்றும் வொர்க்அவுட்டில் மிகுந்த கவனம் செலுத்துவது தான் காரணம்.
அந்தவகையில் தற்போது இவர் தனது உடம்மை எப்படி இவ்வளவு சிக்கென்று வைத்துள்ளார் என்பதை தெரிந்து கொள்வோம்.
உடற்பயிற்சிகள்
தினசரி அவருடைய வொர்க்அவுட்டில் கார்டியோ பயிற்சிகள் மேற்கொள்வார்..
ஜிம்மில் வெயிட் லிப்டிங், க்ரஞ்சஸ், ஏபிஎஸ், கார்டியோ ஆகிய பயிற்சிகள்.
உடலை இலகுவாகவும் நெகிழ்ச்சித் தன்மையுடனும் வைத்துக் கொள்வதற்கு பிளேட் பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
தமன்னா தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் தன்னுடைய நாளை தொடங்குவதே யோகாவில் இருந்துதானாம்.
தமன்னாவுக்கும் நீச்சல் அடிப்பது மிகப்பிடித்த விஷயம் ஆகும்.
டயட்
தமன்னாவின் தினசரி உணவில் கட்டாயம் யோகர்ட் இருக்கும்.
காலை உணவு - காலையில் ஆம்லெட் மற்றும் நிறைய காய்கறிகள் (அ) கிரானூலா சேர்த்த கார்ன்பிளேக்ஸ், நட்ஸ், பழங்கள் அதனுடன் பாதாம் பால் சேர்த்து எடுத்துக் கொள்வார்.
மதிய உணவு - மதிய உணவுக்கு வெள்ளை அரிசி அல்லது பிரௌன் ரைஸ் அதோடு நிறைய காய்கறிகள் எடுத்து கொள்வார்.
இரவு உணவு - இரவு நேரங்களில் ஒரே ஒரு தோசை, சாம்பார். எட்டு மணிக்கு முன்பாக இரவு உணவை முடித்து விடுவாாம்.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடித்துவிடுவாராம் தமன்னா. அதுமட்டுமின்றி இடைவெளி நேரங்களில் ஜூஸ், இளநீர், வெஜிடபிள் சூப் ஆகிய திரவ உணவுகளையும் எடுத்துக் கொள்கிறார்.