பிரபல நடிகையின் வீட்டில் துயர சம்பவம்! கண்ணீருடன் அவர் வெளியிட்ட பதிவு
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங்
தமிழ், பொலிவூட் மற்றும் தெலுங்கு சினிமா படங்களில் தொடர்ந்தும் நடித்து வருகிறார்.
தமிழில் தடையற தாக்க, தீரம் அதிகாரம் ஒன்று, என்.ஜீ.கே போன்ந திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
மேலும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் திரைப்படத்திலும் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகின்றார்.
காதலன்
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். பிரபல பொலிவூட் தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
ஜாக்கி பாக்னானி தமிழில் த்ரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் பதிவு
இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் தான் வளர்த்து வந்த நாய் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை தெரிவித்திருந்தார்.
அதில் அவர் தனது செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து "16 வருடங்களுக்கு முன் எங்கள் வாழ்வில் வந்து எங்களை மிகவும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் மலரச் செய்தாய்..
நான் உன்னுடன் வளர்ந்தேன்.. நாங்கள் உன்னை மிகவும் மிஸ் செய்வோம்.. நீ நன்றாக வாழ்ந்தாய். நீங்கள் கஷ்டப்படாமல் இருந்ததில் மகிழ்ச்சி. உன்னுடைய ஆன்மா சாந்தியடையட்டும் போஷி. எங்கிருந்தாலும் நீ மகிழ்ச்சியாக இரு" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.