கல்லீரல் நோய்க்கு என்றி கார்டு போடுவது இந்த பழக்கம் தானா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!!
பொதுவாக தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கங்கள் ஆகியவற்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த பாதிப்பு ஒரு மனிதனின் இயக்கத்தை பாதிக்கின்றது. மேலும் கல்லீரல் பிரச்சினைக்கு அதிக எடையையும் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மனித உடலில் கல்லீரல் முக்கிய உறுப்பாக இருக்கின்றது. இது புரதங்களை உருவாக்குதல், கார்போஹைட்ரேட்டுகளை சேமித்தல், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றும் செயற்பாட்டைச் செய்கின்றது.
அதிகமான மது பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கும். ஏனெனின் மதுவில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் கல்லீரலில் சேமிக்கப்படுகின்றன.
இது தான் காலப்போக்கில் கல்லீரல் பிரச்சினையாக மாறுகின்றது. மது அருந்தாத ஒருவருக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றது என்றால் அது தவறான உணவு பழக்கங்கள் காரணமாக உருவாகியிருக்கலாம்.
அந்த வகையில் கல்லீரல் நோய் எந்த எந்த அறிகுறிகளில் காணப்படும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
கல்லீரல் நோய் அறிகுறிகள்
முகத்தில் திடீரென ஒரு வீக்கம் ஏற்படும் அல்லது தடிப்புகள், முகத்தில் தோல் சிவந்து போவது, சருமத்தில் அரிப்பு ஆகிய அறிகுறிகள் இருக்கலாம்.
ஏனெனின் இது உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.
பசியின்மை, மற்றும் வாந்தி வருவது போன்ற குமட்டல் உணர்வு ஏற்படும்.
கழுத்திற்கு கீழ் இருக்கும் பகுதிகள் கருமையாக காணப்படும். மேலும் கால் மற்றும் மற்றைய பகுதிகளில் நீர்தேங்கும்.
எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும்.
கல்லீரல் நோய் ஏற்படமால் இருக்க செய்ய வேண்டியவை
1. எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும்
2. மது அருந்த வேண்டாம்
3. காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்
4. வழக்கமான உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும்
5. நீரிழிவு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுக்குள் வைத்திருக்கவும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |