கல்லீரல் நோயின் முக்கிய அறிகுறிகள் என்னென்ன?... தடுக்கும் வழிமுறைகளுடன் இதோ...!
மனித உடலில் முக்கியமான உறுப்புகளின் ஒன்று தான் கல்லீரல். இந்த நோய் இதன் அறிகுறிகளை வெளிப்படுத்த 10 முதல் 15 ஆண்டுகள் வரை எடுக்கும்.
மேலும் மதுவை அதிகமாக உட்கொள்ளும்போது, கல்லீரலுக்கு பெரிய அளவில் சேதம் விளைவிக்கும்.
இவை உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது செய்கிறது.
எனவே கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், அதனால் உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
கல்லீரல் நோய் அறிகுறிகளாக கால்களில் வீக்கம், வறண்ட தொண்டை, பசியின்மை, மஞ்சள் காமாலை, வந்தி, மயக்கம், குமட்டல் போன்றவை ஆரம்பத்தில் உண்டாகுவது அறிகுறிகளாகும்.
கால்களில் வீக்கம்
ஒருவருக்கு கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், கால்களில் லேசாக வீக்கம் அவ்வப்போது ஏற்படும்.
எனவே திடீரென்று கால்கள் வீங்கியிருந்தால், உடனே மருத்துவரை சந்திக்கவும்.
மஞ்சள் காமாலை
ஒருவரின் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதோ, அவர்களுக்கு மஞ்சள் காமாலை காரணமாக பித்தநீர் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.
ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன? இதை செஞ்ச ஆயுளுக்கும் கிட்டயே வராதாம்!
வயிற்று உப்புசம் மற்றும் வலி
கல்லீரலில் கட்டிகளானது அவ்வளவு சீக்கிரம் வராது. ஆனால் கல்லீரலானது தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால் தான், கல்லீரலில் கட்டிகள் உருவாகும்.
உங்கள் கல்லீரலில் கட்டிகள் இருந்தால், வலது பக்கத்தில் அடிவயிற்றிற்கு சற்று மேலே வலி எடுப்பதோடு, வயிறு உப்புசத்துடனும் இருக்கும்.
வாந்தி, சோர்வு, காய்ச்சல்
கல்லீரலை வைரஸ் தாக்கினால் உருவாவது தான் ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் அழற்சி.
உங்களுக்கு கல்லீரல் அழற்சி இருந்தால், வாந்தி, சோர்வு, காய்ச்சல், மயக்கம், குளிர் போன்றவற்றை சந்திக்கக்கூடும்.
தலைச்சுற்றல்
ஆல்கஹால் குடிப்பவராக இருந்தால், விரைவில் கல்லீரல் பாதிக்கப்படும். ஆல்கஹால் அதிகம் பருகி கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், தலைச்சுற்றல் மற்றும் குழப்பம் அடிக்கடி ஏற்படும்.
குமட்டல்
கல்லீரல் சரியாக இயங்காமல் இருப்பின், குமட்டலை சந்திக்கக்கூடும். எனவே உங்களுக்கு அவ்வப்போது குமட்டல் ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.
சோர்வு
நாள்பட்ட சோர்வு கூட கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறியே. ஆகவே உங்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால், மருத்துவரை சந்தித்து முறையான பரிசோதனையை மேற்கொண்டு, சரியான காரணத்தைக் கண்டறியுங்கள்.
தோல் எரிச்சல்
நீண்ட நாட்களாக தோலில் அரிப்பு ஏற்பட்டால், அதனை சாதரணமாக விட்டு விடாதீர்கள். இவை மிக பெரிய ஆபத்தை கூட உங்களுக்கு தரும்.
குறிப்பாக கல்லீரல் மோசமான நிலையில் இருந்தால் உடலில் நீண்ட நாட்கள் அரிப்பு ஏற்படும். அத்துடன் சருமமும் வறண்டு போகும்.
உடல் பருமன்
உங்களின் உடல் எடை கூடினால் அது பல வகையான ஆபத்துகளுக்கான அறிகுறியும். அதில் முதன்மையானது இந்த கல்லீரல் பிரச்சினை.
திடீரென உடல் எடை கூடுபவர்களுக்கு ரத்தத்தின் ஓட்டம் தடை செய்யப்பட கூடும். மேலும், சில சமயங்களில் இது தலைகீழாக நடக்கலாம்.
வெளுத்த சருமம்
கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.
வாய் கசப்பு
கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது.
எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
எல்லா நேரமும் சோர்வாக இருக்கிறீர்களா? நரம்புகள் கூட பாதிக்கலாம்! அலட்சியம் வேண்டாம்
கல்லீரல் செயலிழப்பு எதனால் ஏற்படுகிறது?
உணவு செரிமானம் ஆக கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற கல்லீரலின் பங்கு முக்கியம். ஆனால், மரபணு சார்ந்த பிரச்னைகள், வைரஸ் பாதிப்பு, ஆல்கஹால் எடுத்துக்கொள்ளுதல் மற்றும் நீண்ட நாட்கள் வயிற்றுப்பொருமல் போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
சிரோசிஸ் (cirrhosis) என்று சொல்லக்கூடிய வடுக்கள் உருவாகும். சரியாக சிகிச்சை எடுக்காவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்திவிடும்.
மேலும், கல்லீரலில் சிறிது வலி இருக்கும்போது ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடையும் வாய்ப்புகள் அதிகம்.
சிரோசிஸ் என்பது நீண்டகால பாதிப்பு காரணமாக கல்லீரல் மெதுவாக மோசமடைந்து செயலிழக்கும் ஒரு நிலை.
செயலிழப்பின் அறிகுறிகள்
சிரோசிஸ் நோயால் பாதிகப்பட்ட 50% பேர்களில் ஆரோக்கியமான கல்லீரல் திசுக்களை வடு திசுக்கள் ஆக்கிரமித்துவிடும்.
இதனால், வயிறு மற்றும் கால்பகுதிகளில் நீர்க்கோர்த்து வீக்கம் உண்டாகும்,. கல்லீரலில் ஆல்புமின் சுரப்பை அதிக ரத்த அழுத்தம் தடுக்கும்போது இந்த பிரச்னை உருவாகும்.
ஆல்புமின் என்பது திசுக்களில் ரத்தக்கசிவு ஏற்படாமல் பாதுகாக்கும் ஒரு புரதம்.
முடி கொட்டுவதை அடியோடு நீக்கனுமா? அப்போ பூண்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள்
ஓட்ஸ்மீல் மற்றும் கொழுப்பு உணவுகள்
ஓட்ஸ்மீல் உணவுல் உள்ள நார்ச்சத்துகள் கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைத்து ஈரல் நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
அதிகப்படியான கொழுப்புகள் கல்லீரலில் படிந்து சிரோசிஸ் என்ற கல்லீரல் நோயை உண்டாக்குகிறது. எனவே உங்க கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க கொழுப்பு உணவுகளை தவிருங்கள்.
காலை வெறும்வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்! பாரிய ஆபத்தை ஏற்படுத்துமாம்
ப்ரோக்கோலி மற்றும் காபி
காய்கறிகளில் முக்கியமாக பிராக்கோலி பாதுகாக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதை நீங்கள் பாதாம் பருப்பு, க்ரான்பெர்ரி இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் வினிகர் மற்றும் பூண்டுடன் வதக்கி சுவையாக சாப்பிடலாம்.
காபி ஆனது உடலுக்கு சில கேடுகளை விளைவித்தாலும், ஒரு நாளைக்கு 2-3 கப் எடுத்து வருவது உங்க கல்லீரலை பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் காபி குடிப்பதால் கல்லீரல் புற்று நோய் வருவது கூட தடுக்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாதாம் பருப்பு
பாதாம் பருப்பில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை நீரில் ஊறவைத்து மறு நாள் சாப்பிட்டு வர கொழுப்பு கல்லீரல் நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
மேலும் உங்க இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
கீரைகள்
கீரைகளில் குளுதாதயோன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இவை கல்லீரல் சரியாக வேலை செய்ய உதவுகிறது.
எனவே கீரைக் பொறியல், கடையல் வைத்து சாப்பிடுங்கள்.
பாக்கெட் உணவுகளை தவிர்க்கவும்
சிப்ஸ் மற்றும் அப்பளம் போன்ற எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட பாக்கெட் உணவுகளை தவிருங்கள்.
ஏனெனில் இதில் அதிகப்படியான சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு என்று உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
எடையை வேகமாகக் குறைக்கும் பிரிஞ்சி இலை நீர்! இப்படி எடுத்து கொண்டாலே போதுமாம்
கல்லீரை பாதிக்கும் முக்கிய காரணங்கள்
-
தவறான உணவுப் பழக்கம்
-
அதிக உடல் எடை
-
அதிக மதுப்பழக்கம்
-
புகைப்பிடித்தல்
-
பாக்கெட் உணவுகள்
- கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்