இந்த மோசமான 5 உணவு பழக்கம் எலும்புகளுக்கு ஆபத்து: ஜாக்கிரதை மக்களே
நாம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு எலும்புகள் வலுவமாக இருப்பது மிக மிக அவசியம். வயது அதிகரிக்கும் போது,எலும்புகளில் பலவீனம் ஏற்படுவது இயற்கையானது என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்,
ஆனால் இன்றைய காலகட்டத்தில், இளைஞர்களுக்கும் எலும்பு பலவீனம் அடைவது சாதாரண விஷயமாகிவிட்டது.
எலும்புகள் பலவீனமாக இருக்கும்போது, உங்கள் அன்றாட பணிகளை பாதிக்கும் வகையிலான பல பிரச்சனைகள் ஏற்படும். எலும்புகள் வலுவிழக்க பல காரணங்கள் இருக்கலாம்.
உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை தவிர, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான சில கெட்ட பழக்கங்களும் எலும்புகள் வலுவிழக்க காரணமாக இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
எலும்புகளை பலவீனப்படுத்தும் பழக்கங்கள்
மது அருந்துதல்
அதிக மது அல்லது ஆல்கஹால் அருந்துவது உங்கள் எலும்புகளில் பலவீனத்தை ஏற்படுத்துகிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர், ஏனெனில் அதிக மது அருந்துவதால், உடலின் கால்சியத்தை கிரகித்துக் கொள்ளும் திறன் குறைகிறது.
அதிக காபி குடிப்பது
காபியை அதிகமாக உட்கொள்வதால் எலும்புகள் பலவீனமடையும். காபியில் காஃபின் அளவு அதிகமாக இருப்பதால், இது எலும்புகளில் இருக்கும் கால்சியத்தின் அளவைக் குறைக்கிறது.
அதிகப்படியான உப்பு
அதிக உப்பை உட்கொள்வதால் எலும்புகள் பலவீனமடையும், ஏனென்றால் அதிக உப்பு சாப்பிடுவதால், கால்சியம் உடலில் இருந்து சிறுநீர் வழியாக வெளியேறும். இதன் காரணமாக எலும்புகள் படிப்படியாக பலவீனமடையத் தொடங்குகின்றன.
அதிக அளவில் குளிர்பானங்களை அருந்துதல்
குளிர்பானங்களை உட்கொள்வதால் எலும்புகள் பலவீனமடையும், ஏனென்றால் குளிர்பானங்களில் சோடா மிக அதிகம். அதிக குளிர்பானத்தை குடிப்பது உங்கள் இரத்தத்தில் கால்சியத்தின் அளவைக் குறைக்கிறது மற்றும் பாஸ்பேட்டின் அளவை அதிகரிக்கிறது, இதன் காரணமாக எலும்புகளுக்கு போதுமான கால்சியம் கிடைக்காது.
புகை பிடித்தல்
மாறிவரும் வாழ்க்கை முறையில் புகை பிடிப்பது ஒரு நாகரீகமாகிவிட்டது. ஆனால் இந்த பழக்கம் உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்தலாம். புகைபிடித்தல் எலும்பு செல்களை சேதப்படுத்துகிறது, இதன் காரணமாக எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன.