தலைமுடியை பிரச்சினையை கட்டுப்படுத்தும் ஐந்து புரத உணவுகள்
ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினைகளில் தலைமுடி பிரச்சினையும் ஒன்று.
சுற்றுச்சூழல் மாசுபாடு, துரிதமான வாழ்வியல் சூழல், தலைக்கு நாம் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் இரசாயனப் பொருட்கள் போன்றவற்றால் தலைமுடி அதிகம் உதிர்கிறது.
இதற்கு நம் உணவில் புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்ய முடியும்.
அந்த வகையில் எவ்வாறான உணவுகளிலிருந்து ஊட்டச்சத்துக்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது தொடர்பாக தெரிந்துக் கொள்வோம்.
உணவு பயன்பாட்டின் மூலம் தலைமுடியை பாதுகாக்க சில டிப்ஸ்
மீன் வகைகளில் அதிகபடியான புரதம் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் காணப்படுகிறது. இது தலைமயிர் கால்களை வலுவடைய செய்து முடி உதிர்வை தடுக்கும்.
பால், தயிர் மற்றும் முட்டை ஆகியவை புரதசத்து அதிகமுள்ள உணவுகளாகும். தினசரி இவற்றை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம் மற்றும் இரும்புச் சத்து, பி12, ஃபேட்டி ஆசிட் காணப்படுகிறது இது முடியின் வேர்களை பலப்படுத்துகிறது.
சிறு தானியங்களில் புரதம், ஜிங்க், இரும்புச் சத்து, ஃபோலிக் ஆசிட், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கின்றன. இதனால் தலை முடி வளர்ச்சி அதிகபடுத்தப்படுகிறது. மேலும் சோயாவில் சுமார் 90 சதவீத புரதம் இருக்கிறது. இதுவும் முடி வளர்ச்சிக்கு தேவையான இரும்புச்சத்தை வழங்கும்.
பெரும்பாலானர்களின் விரும்பதக்க உணவாக இருக்கும் இறைச்சியில் நமது முடி வளர்ச்சி மற்றும் மயிர் கால்களை வலுப்படுத்தும் சத்துக்கள் உள்ளன. இது முடி உதிர்வை கட்டுபடுத்தும்.