Zika virus symptoms: கர்ப்பிணிகளின் கருவை சிதைக்கும் ஜிகா வைரஸ்- அறிகுறிகளுடன், ஆபத்துக்களை தெரிஞ்சிக்கோங்க
இந்தியா போன்ற நாடுகளில் தமிழகத்தை தாக்கிய நோய்களில் ஜிகா வைரஸும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
ஜிகா வைரஸ் தொற்று தமிழகத்தில் பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் தற்போதும் ஒரு சில இடங்களில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
காய்ச்சலாக ஆரம்பிக்கும் இந்த வைரஸ் தொற்று ஒரு சில அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ளலாம். அதிலும் குறிப்பாக கர்ப்பிணி பெண்களை தாக்கும் பொழுது அது அவர்களின் வயிற்றில் உள்ள குழந்தைகளையும் பாதிக்கிறது என மருத்துவர்க்ள கூறுகிறார்கள்.
ஜிகா வைரஸ் தொற்று குறித்து எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
அப்படியாயின் ஜிகா வைரஸ் தொற்றை அடையாளம் காண்பது எப்படி? அதிலிருந்து வெளிவருவது எப்படி? அதற்கான உணவுகள் தொடர்பான விவரங்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
ஜிகா வைரஸ் என்றால் என்ன?
ஜிகா வைரஸ் நோய் அல்லது ஜிகா காய்ச்சல் முக்கியமாக பாதிக்கப்பட்ட ஏடிஸ் வகை கொசு (ஏ. ஈஜிப்டி மற்றும் ஏ. அல்போபிக்டஸ்) கடித்தால் ஏற்படுகிறது. ஏடிஸ் கொசுக்கள் குறிப்பாக அதிகாலை மற்றும் பிற்பகல்/மாலை நேரங்களில் தாக்கும். இதனால் சிக்குன்குனியா, மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களும் பரவலாம்.
கர்ப்பிணிப் பெண்ணை பாதிக்கப்பட்ட கொசுவால் குத்தினால், ஜிகா வைரஸ் நஞ்சுக்கொடிக்குள் சென்று கருவை பாதிக்கலாம். இதன் விளைவாக சில கர்ப்பிணிப் பெண்கள் கருச்சிதைவு மற்றும் பிறவி குறைபாடுகளான கருவின் மைக்ரோசெபாலி மற்றும் பிற நரம்பியல் அசாதாரணங்கள் உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்படும். இதனை சரிச் செய்வதற்கு தடுப்பூசியோ மருந்துகளோ இல்லை.
எப்படி பரவும்?
ஜிகா வைரஸ் தொற்று வெப்பமண்டல பருவநிலை குறைவாக இருக்கும் பகுதிகளில் வேகமாக பரவும். இது போன்ற இடங்களில் ஜிகா வைரஸ் மட்டுமல்லாது ஏடிஸ் என்ற கொசுவால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களையும் ஏற்படுத்தும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இந்த தொற்று நோய்களின் இறப்பு வீதம் சமீபக்காலமாக அதிகமாகவே உள்ளன.
டெங்குக் காய்ச்சலை உருவாக்கும் அதே கொசுதான் இந்த ஜிகா வைரஸ் ஏற்படவும் காரணமாக இருக்கிறது. இந்தக் கொசு, நன்னீரில் வாழும். கிட்டத்தட்ட டெங்கு வைரஸுக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தும். நம்முடைய உடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சும் போது அதிலிருக்கும் வைரஸ் உள்ளே சென்று விடும்.
ஜிகா வைரஸ் அறிகுறிகள் 1 வாரத்துக்கு நீடிக்கலாம். அதே சமயம் அவர்களில் கர்ப்பிணிகளாக இருந்தால் அது அவர்களின் கருவில் உள்ள குழந்தைக்கு தாக்கம் கொடுக்கும்.
அறிகுறிகள்
* தலைவலி
* முதுகுவலி
* அதீத உடல் சோர்வு
* கண்கள் சிவத்தல்
* சருமத்தில் ஏற்படும் அரிப்புடன் கூடிய தடிப்புக்கள்
* மூட்டு வலி
* கண்களுக்கு பின்னால் வலி
* வாந்தி, மயக்கம்
* தசைவலி
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் காய்ச்சலுடன் 1 வாரத்திற்கு மேல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும். ஏனெனின் ஜிகா வைரஸ் தாக்கத்தினால் காய்ச்சல் ஏற்படும் போது கிட்டதட்ட 5 நாட்கள் முதல் 1 வாரம் வரை நீடிக்கும். அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகளை அதிகமாகத் தாக்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜிகா வைரஸின் ஆபத்தான காரணிகள்
- பாதுகாப்பற்ற பாலியல்
- ஜிகா பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு பயணம்
- ஜிகாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருத்தல்
- இரத்த மாற்று
- கொசு கடித்தது
ஜிகா வைரஸால் ஏற்படும் பாதிப்புகள்
- கடுமையான நீரிழப்பு
- குய்லின்-பாரே நோய்க்குறி
- பிறவி குறைபாடுகள், குறிப்பாக மைக்ரோசெபாலி
- கர்ப்பிணிப் பெண்களில் கருச்சிதைவு மற்றும் இறந்த பிறப்பு.
- முன்கூட்டிய பிறப்பு விழித்திரை அல்லது பார்வை நரம்பில் உள்ள குறைபாடுகள் போன்ற ஜிகா தொடர்பான மைக்ரோசெபாலி உள்ள குழந்தைகளின் கண் பிரச்சனைகள் பிற்காலத்தில் குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
- செவித்திறன் குறைபாடு
தடுக்கும் முறைகள்
1. வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. காலநிலை மாற்றங்களின் போது தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.
3. கர்ப்பிணி பெண்களை ஜிகா வைரஸ் தாக்கினால், குழந்தையும் பாதிக்கப்படும். இதனால் எந்தளவு முடியுமோ அவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்.
4. குளிர்காலங்களில் கொசுக்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
5. போதுமான நேரம் ஓய்வெடுக்க வேண்டும். ஏனெனில் ஜிகா வைரஸ் தொற்றால் உடல் சோர்வு மற்றும் காய்ச்சலாக இருக்கும். இதனால் ஓய்வாக இருந்து உடலை பார்த்து கொள்ள வேண்டும்.
6. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அடிக்கடி பாராசிட்டமால் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |