leptospirosis symptoms: மனித குலத்துக்கு எமனாகும் பாக்டீரியா! லெப்டோஸ்பைரோசிஸ் அறிகுறிகள் எப்படியிருக்கும்?
லெப்டோஸ்பிரோசிஸ் என்பது லெப்டோஸ்பைரா என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோயாகும், இது அசுத்தமான நீர் அல்லது மண்ணில் காணப்படுகிறது.
இது பல்வேறு வகையான விலங்குகளையும் மக்களையும் பாதிக்கிறது. சிகிச்சையின்றி, மக்களில் ஏற்படும் லெப்டோஸ்பிரோசிஸ் சிறுநீரக பாதிப்பு, மூளைக்காய்ச்சல் (மூளை மற்றும் முதுகுத் தண்டைச் சுற்றியுள்ள சவ்வு அழற்சி), கல்லீரல் செயலிழப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது. இந்த பாக்டீரியா தொற்றால் மரணம் கூட ஏற்படலாம்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் இந்த பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்படுவதாகவும் கிட்டத்தட்ட 60,000 இறப்புகள் அதனால் நிகழ்வதாகவும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.
மக்களைப் போலவே, விலங்குகளும் நீர் அல்லது மண்ணில் உள்ள அசுத்தமான சிறுநீர் அல்லது பிற உடல் திரவங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்படுகின்றது.
லெப்டோஸ்பிரோசிஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளில் அறிகுறிகள் ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு வகையில் பிரதிபலிக்கும், சில விலங்குகளில் வெளிப்படையாக அறிகுறிகள் தெரியாது.
குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
நோய்க்கான காரணிகள்
மழைக்காலத்தில் கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் கசிவு மற்றும் வடிகால் உடைப்பு காரணமாக அசுத்தமான தண்ணீரைக் பருகுவதால் நோய் தொற்று ஏற்படலாம்.
விலங்குகளின் சிறுநீர் கலந்த மண்ணில் இருந்து பெறப்பட்ட தண்ணீரை குடிப்பது அல்லது உணவை உண்பது.
பாக்டீரியா தொற்று தோலில் சிறிய வெட்டு அல்லது கீறல் உள்ள போது உடலில் நுழையும் வாய்ப்பு காணப்படுகின்றது அதன் காரணமாகவும் நோய் தொற்று ஏற்படலாம்.
சேறு மற்றும் சகதி நிறைந்த வயல்களில் விளையாடும் குழந்தைகள், மழையின் போது ஏற்படும் அசுத்தமான சாலைகளில் நடப்பது தொற்றுக்கு காரணமாக இருக்கலாம்.
விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள், மீனவர்கள் மற்றும் கழிவுநீர் தொழிலாளர்களிகளுக்கு இந்த நோய் ஏற்படும் ஆபாயம் அதிகமாக இருக்கின்றது.
குறிப்பாக லெப்டோஸ்பைரோசிஸ் என்ற நுண்ணுயிர் இருக்கும். அந்தத் தண்ணீரை குடிக்கும்போதோ, அந்த தண்ணீர் உடலில் படும்போதோ எலியின் உடலில் பாக்டீரியா தாக்கம் ஏற்படும்.
அப்படி தொறால் பாதிக்கப்பட்ட எலிகளின் எச்சில், சிறுநீர் மூலமாகத்தான் மனிதர்களுக்கு `லெப்டோஸ்பைரோசிஸ்' எனப்படும் எலிக்காய்ச்சல் ஏற்படுகிறது.
முக்கிய அறிகுறிகள்
காய்ச்சல்
தலைவலி
குளிர்
உடல் அல்லது தசை வலி
வாந்தி அல்லது குமட்டல்
மஞ்சள் தோல் மற்றும் கண்கள் (மஞ்சள் காமாலை)
சிவந்த கண்கள்
வயிற்று வலி
வயிற்றுப்போக்கு
சொறி போன்ற அறிகுறிகள் லெப்டோஸ்பைரோசிஸ் பாக்டீரியா தொற்றின் மிகமுக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றது.
தொற்றை எப்படி தடுப்பது?
உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கைகளை அடிப்படி நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக சாப்பிடும் முன்னர் கைகள் சுத்தமாக இருக்கின்றதா என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சமையவின் போது காய்கறிகளை நன்றாகக் கழுவியபிறகு பயன்படுத்த வேண்டும். நீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறவைத்து பருக வேண்டும்.
பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்படும் நீரில் எலியின் கழிவுகள் கலக்க வாய்ப்புகள் அதிகம். அவற்றை கொண்டு முகம் கழுவினாலோ, குளித்தாலோ இந்த தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் நீண்ட நாட்கள் சேமித்து வைத்த தண்ணீரை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
வெயிளில் சென்று வீடு திரும்பியதும், கை, கால்களை சவர்காரம் கொண்டு உரிய முறையில் தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.
வீடுகளில் எலித்தொல்லை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.வெளியில் சென்று உள்ளே வரும் செல்லபிராணிகளிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
உடலில் காயம், சிராய்ப்பு, புண் ஏற்பட்டால் தாமதிக்காமல் `டி.டி' தடுப்பூசி போட்டுக்கொள்வதும் இந்த தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு கொடுக்கும்.
முக்கியமாக மூன்று நாள்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தாலோ அல்லது மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் தென்பட்டாலோ அதனை அலட்சியப்படுத்தாது உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |