நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி ஏற்படும் மயக்கம்! காரணம் என்ன?
நீரிழிவு நோயாளிகளுக்கு சில தருணங்களில் மயக்கம் ஏற்படுவது எதனால் என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோய்
இன்றைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது அனைத்து மக்களையும் பயமுறுத்தி வருகின்றது. 40வயதிற்கும் குறைவாக இருப்பவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவினை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது தற்போது அவசியமாகியுள்ளது.
அதிலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் பாதித்துவந்த நிலையில், தற்போதுள்ள காலக்கட்டத்தில் சிறுவயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய்.
உடலில் இன்சுலின் அளவு குறையும்போது அல்லது நமது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்திலுள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்துகின்றது.
இதனால் சிறுநீரகம் செயலிழந்து போவதுடன், இதயம் சம்பந்தமான நோய்களும் ஏற்படுகின்றது. இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகின்றது.
மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால், உடல் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு, இறுதியில் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
மயக்கம் ஏற்படுவது ஏன்?
நீரிழிவு நோயாளிகளைப் பொருத்த வரையில் மயக்கம் ஏற்படுவதுண்டு. இதற்கு காரணம், அடிக்கடி சிறுநீர் கழிப்பதால், உடம்பில் நீர் சத்து குறைகின்றது. இதனால் தலைசுற்று, மயக்கம் ஏற்படும்.
இதுமட்டுமில்லாமல் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, ரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவையும் காரணமாகும்.
எனவே சர்க்கரை நோயாளிகள் ரத்த அழுத்தத்தை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி தலை சுற்றல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |