நீரிழிவு நோயாளிகளே பயமே வேண்டாம்... இந்த 5 தேநீரால் நிச்சயம் நிகழும் அதிசயம்
நீரிழிவு நோயாளிகள் எந்தவொரு பயமில்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய ஐந்து தேநீர் வகைகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய்.
உடலில் இன்சுலின் அளவு குறையும்போது அல்லது நமது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்திலுள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்துகின்றது.
இதனால் சிறுநீரகம் செயலிழந்து போவதுடன், இதயம் சம்பந்தமான நோய்களும் ஏற்படுகின்றது. இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகின்றது.
தங்களது அன்றாட உணவு கட்டுப்பாட்டுக்குள் வைத்து இந்த நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். நீரிழிவு நோயாளிகள் தேநீர் மற்றும் பிற பானங்கள் குடிக்கக்கூடாது என்று கூறுவதை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் கீழே கூறப்பட்டுள்ள தேநீரை எந்தவொரு பயமில்லாமல் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேநீர்
ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் கிரீன் டீ எடையைக் குறைக்கவும், சருமத்தை பாதுகாக்கவும், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவுகின்றது. மேலும் இவை ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் உதவுகின்றது. சர்க்கரை நோயாளிகள் காஃபின் இல்லாத கிரீன் டீயை எடுத்துக்கொள்ளலாம்.
இதே போன்று பிளாக் டீயும் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துவதுடன் உடலில் ஏற்படும் அழற்சி தொந்தரவுகளையும் குறைக்கும்... பிளாக் டீ கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலைக் குறைப்பதாக என்பதை நிரூபித்துள்ளது.
காஃபின் இல்லாத கெமோமில் தேநீரானது இரவில் நல்ல தூக்கத்தை கொடுப்பதுடன், இன்சுலின் உற்பத்தியினை குறைக்கவும் உதவுகின்றது. தூங்கும் முன்பு ஒரு கப் இந்த தேநீரை பருகுவது நீரிழிவு நோயாளிகளின் சிறந்த தேர்வாகவும் இருக்கின்றது.
மேலும் செம்பருத்து தேநீரும் பாலிஃபீனால் ஆக்ஸிஜனேற்றம், கரிம அமிலங்கள், அந்தோசயினின்கள் கொண்டுள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக காணப்படுகின்றது. இதுமட்டுமில்லாமல், ரத்த அழுத்தம் மற்றும் கொலாஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துவதில் உதவியாக இருந்து வருகின்றது.
உயர் ரத்த சர்க்கரை உள்ளவர்களுக்கு இந்த தேநீர் மிகவும் உதவியாக இருக்கின்றது, மேலும் அழற்கு எதிர்ப்பு பண்புகளும், ஆன்டி ஆக்ஸிடன்ட் மஞ்சளில் இருக்கின்றது. சில ஆய்வுகளில் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் சிறுநீரக பிரச்சினைக்கும் இவை தீர்வாக அமைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |