நீரிழிவு நோயாளிகள் இட்லி சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
நீரிழிவு நோயாளிகள் தென்னிந்தியர்களின் முக்கிய உணவான இட்லி சாப்பிடலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ள நிலையில், தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகின்றது.
நீரிழிவு நோய்
இன்றைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது அனைத்து மக்களையும் பயமுறுத்தி வருகின்றது. 40வயதிற்கும் குறைவாக இருப்பவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவினை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது தற்போது அவசியமாகியுள்ளது.
அதிலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் பாதித்துவந்த நிலையில், தற்போதுள்ள காலக்கட்டத்தில் சிறுவயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
image credit: istockphoto
ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய்.
உடலில் இன்சுலின் அளவு குறையும்போது அல்லது நமது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்திலுள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்துகின்றது.
இதனால் சிறுநீரகம் செயலிழந்து போவதுடன், இதயம் சம்பந்தமான நோய்களும் ஏற்படுகின்றது. இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகின்றது.
மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால், உடல் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு, இறுதியில் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
இட்லி சாப்பிடலாமா?
மற்ற உணவுகளை விட இட்லியில் கலோரிகள் அதிகமாக இருப்பதாகவும் மாவு சத்து அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. சர்க்கரை நோயாளிகள் அதிக இட்லிகளை சாப்பிடக்கூடாது.
ஆனால் அதே நேரத்தில் ரவா இட்லி, ராகி இட்லி போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இட்லிக்கு தேங்காய் சட்னியை விட புதினா சட்னி தக்காளி சட்னி அல்லது சாம்பார் தொட்டு சாப்பிடுவது நோயாளிகளுக்கு சிறந்ததாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |