இந்த கருப்பு அரிசியை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வாழ் நாளில் வராது! கையில் தொடவே கூடாத அரிசி எது தெரியுமா?
ஒருவருடைய உடலில் இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய்.
உடலில் இன்சுலின் அளவு குறையும்போது அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கட்டாயம் உணவு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பொதுவாகவே தினமும் சோறு சாப்பிடும் பழக்கும் எம்மில் பலருக்கு உண்டு. ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசியை தேர்ந்து எடுத்து சாப்பிட வேண்டும்.
அப்படி நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தைக் கொடுக்கும் அரிசி எது? ஆரோக்கியத்தை கொடுக்கும் அரிசி எனது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று காட்டுயானம் என்னும் அரிசியாகும். இது தற்போது மக்களால் பரவலாக வாங்கி சாப்பிடப்படுகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இதனை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த அரிசியை சாப்பிட்டாலே நீரிழிவு நோய் நம்மை நெருங்கவே நெருங்காது. மெதுவாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு அரிசி இது. மாறாக தற்போது நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் வெள்ளை அரிசி நாம் மென்று சாப்பிடாமலே அதி விரைவாக செரிமானம் ஆகி விடுகிறது. இதன் காரணமாக இது நம் உடலின் இரத்தத்தில் ஈசியாக கலந்து நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது.
வெள்ளை அரிசியில் உயர் க்ளைகோமிக் குறியீடு இருக்கிறது. இதில் நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் குறைவாக உள்ளது. வெள்ளை அரிசி அதிகம் உட்கொள்வதால் டைப் 2 நீரிழிவு அபாயம் அதிகரிக்கும்.
நீரிழிவு நோய் வந்துவிட்டாலே அடுத்தடுத்து பல நோய்கள் வந்து விடும்.
இதனால் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதன் நன்மைகளைப் பற்றி நம் தலைமுறையினருக்கு சொல்லி கொடுங்கள்.
அரிசியை வெறும் சாதமாக தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனை புட்டு, இடியாப்பம், கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி, பூரி, இட்லி, உப்புமா, தோசை, அடை என பல வகைகளில் அவரவருக்கு பிடித்தமாதிரி செய்து சாப்பிடலாம்.
இப்போதெல்லாம் நீரிழிவு நோயாளிகள் சப்பாத்தி சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் நம் வெப்பநிலைக்கு ஏற்ற உணவு சப்பாத்தி கிடையாது இருநூற்று பத்து நாட்கள் விளைவிக்கப்படும் காட்டுயானம் அரிசியை பல விவசாயிகள் கஷ்டப்பட்டு அறுவடை செய்து மக்களுக்கு தருகின்றனர்.
அவர்களுக்கு உதவும் வகையிலும், நம் உடல் நலத்திற்காகவும் கண்டிப்பாக நாம் வாங்கி சாப்பிட வேண்டும். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த காட்டுயானம் அரிசி மாமருந்து.