அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் சக்கரை நோய் வருமா? கட்டாயம் தவிர்க்க வேண்டியவை இது தான்
சக்கரை நோயாளிதான் இப்போது பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு நோயாக இருக்கிறது. இந்த நோய் வந்துவிட்டால் பல கட்டுப்பாடுகளும் சூழ்ந்து விடும்.
எந்த உணவை சாப்பிட வேண்டும்? எந்த உணவை சாப்பிடக்கூடாது என பல கேள்விகள் எழுந்து நிற்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தான் இந்த நோய் உங்களைப் பின்தொடர்கிறது. அது மட்டுமல்லாமல் பரம்பரை நோயாகவும் உங்களை தொடரும்.
இந்த நோயைக் கட்டுப்படுத்த சரியான உணவுப்பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, முறையான தூக்கம் போன்றவற்றை கடைப்பிடித்தால் இந்தநோய் ஏற்படாமல் தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம். இந்த நோயை கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் தடுப்பதற்கும் சில டிப்ஸ்களை பின்பற்றினால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
தவிர்க்க வேண்டியவை
புகைப்பிடிப்பவர்களுக்கு சக்கரை நோய் வர வாய்ப்புள்ளது அதனால் புகைப்படிப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
சக்கரை நோயாளிகள் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கார்போஹைட்ரேட் நிறைந்த காய்கறிகள், பட்டாணி, உருளைக்கிழங்கு என்பவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் சக்கரை நோய் வர வாய்ப்புள்ளது அதனால் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அதிக உடல் எடைக் கொண்டவர்களுக்கும் சக்கரை நோய் ஏற்படும் அதனால் உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
தினமும் உண்ணும் போது ஆரோக்கியம் நிறைந்த உணவுகளையும் உண்ண வேண்டும்.
சக்கரை நோயாளிகள் சிலர் பழங்களை விரும்பி உண்ணுவார்கள் ஆனால் அப்படி மிகுத்த சக்கரை அளவைக் கொண்ட பழங்களை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |