முடி உதிர்வு முதல் மாரடைப்பு வரை அனைத்துக்கும் மருந்தாகும் ஒரு துளி வெங்காய சாறு....!
அனைத்து உணவுகளிலும் தவறாமல் சேர்க்கப்படும் ஒரு உணவுப் பொருள் தான் வெங்காயம்.
வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேகவைத்தோ எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்.
ஆனால் பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.
கொட்டிக்கிடக்கும ஊட்டச்சத்துக்கள்
வெங்காயம் பல்வேறு வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை அடங்கிய காய்களில் ஒன்று. இதில் உடலுக்கு நன்மையளிககும் பல்வகை சேர்மங்கள் நிறைந்திருக்கின்றன.
வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும்.
இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.
வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது.
வெங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்களை பழங்காலந்தொட்டே நம்முடைய முன்னோர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இவற்றை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
வெங்காயத்தின் நன்மைகள்
நெஞ்சு வலி - நெஞ்சு வலி காரணமாக இதய உள்ள ரத்த நாளங்களில் இரத்தம் உறைவு ஏற்படுவதால் நெஞ்சு வலி ஏற்படும்.
பக்க வாதம் கூட அதனால் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அப்படி நெஞ்சுவலி பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் உறையும் பிரச்சினை சரியாகும்.
இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகவும் உணவாகவும் வெங்காயம் இருக்கும்.
நுரையீரலை சுத்தம் செய்ய - புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தினமும் அரை டீஸ்பூன் வெங்காயம் சாறினை காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பலம் பெறும்.
இதை போன்று வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வாந்தால் இருமல், இரத்த வாந்தி, ஜலதோசம் மற்றும் சளி போன்ற பிரச்சினைகள் குணமாகும். இதன்மூலம் நுரையீரலில் உள்ள அழுக்குகள் மற்றும் கழிவுகள் வெளியேறும்.
ஜலதோசம் குணமாக -பொதுவாக குளிர்காலத்தில் அனைவருக்கும் ஜலதோசம், இருமல், காய்ச்சல், நெஞ்சி சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனை குணமாக வெங்காய சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
இவ்வாறு சாப்பிடுவதால் குளிர்காலத்தில் ஏற்படும் இருமல், சளி பிரச்சனைகள் குணமாகும். குழந்தைகளுக்கும் இதைக் கொடுக்கலாம்.
மூலநோய் குணமாக - இரத்த மூலம் போன்ற கடுமையான மூல நோய்களும் குணமாக 50 கிராம் வெங்காயத்தை சாறெடுத்து தண்ணீர் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும்.
இந்த முறை தினமும் இரண்டு வேளை என்று பத்து அல்லது பதினைந்து நாட்கள் குடித்து வந்தால் இரத்த மூலம் குணமாகும். சின்ன வெங்காயம் பயன்படுத்துவது கூடுதல் பயனைத் தரும்.
பல் வலி - பல்வலி உள்ளவர்கள் வெங்காயத்தை ஒரு துண்டு எடுத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குணமாகும்.
குறிப்பாக, இரவு துங்கும்போது வைத்துக் கொண்டு படுத்தால் இடைஞ்சல் இல்லாமல் நீண்ட நேரம் வைத்திருக்க முடியும்.
தொடர்ந்து சொத்தைப் பல் உள்ள இடத்தில் இதை செய்து வந்தால், சொத்தைப் பல்லுக்குள் இருக்கும் புழுக்கள் கூட வெளியேறிவிடும்.
பற்களில் பாக்டீரியாக்கள் தங்குவதை அழித்து பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.
இதய நோய்க்கு - வெங்காயத்தில் மிக அதிக அளவில் பிளவனாய்டுகள் இருக்கின்றன. இவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுகின்றன.
அதேபோல வெங்காயத்தில் உள்ள தியோசல்ஃபினேட்டுகள் உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருப்பதுடன் ரத்தம் உறையாமல் பார்த்துக் கொள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதனால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆகிய ஆபத்துக்களில் இருந்து தடுக்கிறது.
ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் நிறைந்தது - ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆற்றலைத் தரும். உடல் பருமனைக் குறைக்கும் போன்ற பல காரணங்களால் ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் நிறைந்த உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுகிறோம்.
க்ரீன் டீ குடிக்கிறோம். ஆனால் நம்முடைய வீட்டில் எப்போதும் இருக்கும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டாலே அதில் இவை எல்லாவற்றையும் விட அதிகமாக ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன என்பது தெரியாமல் இருக்கிறோம்.
சொல்லப்போனால் வெவ்வேறு வகையான 25 க்கும் மேற்பட்ட பிளவனாய்டு ஆன்டி-ஆக்சிடணட்டுகள் வெங்காயத்தில் இருக்கின்றன.
எலும்புகள் வலுவாக - ஒரு வெங்காயத்தில் மட்டும் கிட்டதட்ட 25 மைக்ரோகிராம் அளவுக்கு கால்சியம் சத்து நிறைந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
கால்சியம் எலும்புகளை வலுவாககுவதில் அதிக பங்கு வகிக்கிறது. அதனால் உங்களுடைய தினசரி உணவோடு வெங்காயத்தை சாலட்டாக எடுத்துக் கொள்வது நல்லது.
ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைக்கவும், உடலில் ஆன்டி-ஆக்சிடண்ட்டுகளின் அளவுகளை அதிகரிக்கச் செய்யவும் எலும்புகள் சேதமாகாமல் தடுக்கவும் வெங்காயத்தில் உள்ள கால்சியம் உதவுகிறது.
அதோடு ஆஸ்டியோபொராசிஸ் என்னும் எலும்பு புரை நோய் வராமலும் எலும்பின் அடர்த்தி குறையாமலும் தடுக்கிறது.
சருமம் மற்றும் தலைமுடிக்கு - வெங்காயத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
சருமத் திட்டுக்களைச் சரிசெய்யும் தன்மை கொண்டது. புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் ஏற்படுகின்ற சரும பாதிப்புகளைத் தடுக்கிறது. வைட்டமின் சி அதிகமுள்ள ஓர் உணவு தான் வெங்காயம்.
கொலாஜன் உற்பத்தியை நிர்வகிப்பவும் உற்பத்தி செய்யவும் வெங்காயம் உதவியாக இருக்கிறது.
அதனால் தலைமுடி மற்றும் சருமத்துக்கு நல்ல பொலிவைத் தருகிறது. வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிடுவதோடு அதன் சாறை முடியின் வேர்க்கால்களில் தேய்த்து வர, தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.
ஜீரண சக்தியை மேம்படுத்த - வெங்காயத்தில் மிக அதிக அளவில் நார்ச்சத்தும் புரோபயோடிக்ஸ் நிறைந்திருக்கிறது.
அதேபோல இதிலுள்ள ப்ரீ-பயாடிக்ஸ் இன்சுலின் சுரப்பை முறைப்படுத்தி ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்வதோடு வயிறு ஆரோக்கியம் மேம்படுவதோடு நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கச் செய்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
மருந்தாகும் வெங்காயம்
பித்தம்
4-5 வெங்காயத்தை தோலுரித்து, அத்துடன் சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள பித்தம் குறையும். பித்த ஏப்பமும் மறையும்.
காது இரைச்சல்
வெங்காயச் சாறு மற்றும் கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி வெதுவெதுப்பான சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.
மூலக்கோளாறு
வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத்தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து கலந்து, சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
கட்டிகளை எளிதில் உடைக்கும்
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்துப் பிசைந்து மீண்டும் இலேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்டினால், கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
இருமல்
வெங்காய சாற்றினை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
பல் வலி, ஈறு வலி
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, பின் வெறும் வெங்காயச் சாற்றினைப் பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.
உடல் வலிமை பெற
வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
நரம்புத்தளர்ச்சி
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
ஆசனக் கடுப்பு
வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
ஆண்மை பெருகும்
வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் குடித்தால் ஆண்மை பெருகும்.
சுவாசக் கோளாறு
திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தைக் கசக்கி நுகர வைத்தால் மூர்ச்சை தெளியும்.
தூக்கம்
வெங்காய சாற்றில் நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும். இல்லாவிட்டால் பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும்.
எடையை குறைக்கும்
வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். மேலும் இது உடலில் உள்ள கொழுப்புக்களையும் கரைக்கும்.
செரிமானம்
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவுகிறது.
இரத்த அழுத்தம்
வெங்காயம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அதுமட்டுமின்றி, இழந்த சக்தியையும் மீட்கும்.
நுரையீரல் சுத்தமாகும்
தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காய சாற்றினை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
மூட்டு வலி
வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவி வர வலி குணமாகும்.
முகப்பரு
நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
மாலைக்கண் நோய்
வெங்காயச் சாற்றோடு சிறிது உப்புக் கலந்து அடிக்கடி சாப்பிட்டு வர, மாலைக்கண் நோய் சரியாகும்.
கண் வலி மற்றும் கண் சோர்வு
வெங்காயச் சாற்றையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு
சிறிது வெங்காயத்தில் இன்சுலின் உள்ளதால், நீரழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
முடி வளர்ச்சி
தலையில் ஆங்காங்கு முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால், சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கித் தேய்த்து வர முடி வளரும்.