உங்களுக்கு கழுத்துவலி அதிகமா இருக்கா?
முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மாத்திரம்தான் கழுத்துவலி பிரச்சினை அதிகமாக வரும். ஆனால், தற்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் கழுத்துவலி, முதுகுவலி என்று சொல்லக் கேட்கின்றோம்.
அதற்குக் காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போவதுதான்.
அதன் வெளிப்பாடுதான் கழுத்துவலி. அதாவது, அதிகமான சுமையை தலையில் சுமப்பது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்திருப்பது போன்றவை கழுத்து வலிக்கு அடித்தளமாகின்றது.
அதுமட்டுமில்லாமல் கழுத்து எலும்புகளில் தேய்வு ஏற்டுபதல், இடைச்சவ்வு விலகுதல் போன்றவற்றாலும் கழுத்து வலி ஏற்படலாம்.
தற்போதைய காலகட்டத்தில் அமர்ந்திருந்து தொழில் புரிவது அதிகமாகிவிட்டது. கணினி முன்னால் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வதாலும் இதுபோன்ற கழுத்துவலி பிரச்சினைகள் வரலாம்.
பல மணிநேரம் ஒரே நிலையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது, தலையணைகளை தலைக்கு அடுக்கிவைத்து உறங்குவது, வேலைக்கு செல்வதற்காக பல மணிநேரம் பேருந்தில் அமர்ந்திருப்பது போன்றவையும் கழுத்து வலிக்கு முக்கிய காரணங்களாகும்.
தொலைபேசியில் உரையாடும்போது ஒரு பக்கமாக சாய்ந்துகொண்டு உரையாடுகிறார்கள். நோயின் தீவிரத்தை உணர்ந்து அதன்படி மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு நடந்துகொள்ள வேண்டும்.