மறந்தும் கூட பாலுடன் இந்த உணவை சாப்பிடாதீர்கள்: அவ்வளவு ஆபத்து இருக்கு!
சில உணவுகளுடன் சில உணவுகளை சேர்த்து உண்ண கூடாது, இதை சாப்பிடவுடன் இதை சாப்பிடக்கூடாது என பலர் சொல்லி கேட்டிருப்போம்.
அந்தவகையில் தான் பாலுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது என மீறி சாப்பிட்டால் ஆபத்து என தெரிவிக்கப்படுகின்றது.
பாலில் உள்ள நன்மைகள்
நாம் எடுத்துக் கொள்ளும் அன்றாட உணவுகளில் பால் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. பாலில் அதிக சுவையும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அறிந்ததே.
பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு, சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன.
மற்ற பொருட்களில் இல்லாத சில சத்துக்கள் பாலில் உள்ளதால் நாம் எல்லோரும் நாளொன்றுக்கு 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.
பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாதவை பாலின் பல நல்ல சத்துக்கள் இருந்தாலும், அவற்றுடன் சில உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது.
அவ்வாறு நாம் சாப்பிடும் வேளையில் பல ஆபத்துக்கள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
- சாக்லெட் மற்றும் பல வகையான இனிப்புக்களை உண்ணும் போது பால் சாப்பிடக்கூடாது.
- வாழைப்பழத்துடன் பால் சாப்பிடக்கூடாது இறைச்சி உணவுகள் உண்ட பின்னும் பால் சேர்த்துக் கொள்ள கூடாது.
- பால் மற்றும் ஸ்ட்ரோபெரி பழங்களையும் சேர்த்துக்கொள்ள கூடாது.
இவற்றை நாம் பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது நமது வயிற்றில் நஞ்சாக மாறும் தன்மையையும், இரத்த ஓட்டம் பாதிக்கும், சளி அலர்ஜி, செரிமாண மண்டலத்தில் பிரச்சினை என பல பிரச்சினை ஏற்படும்.