சக்கரை நோயாளிகளுக்கு திராட்சை கொடுக்கலாமா? சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்
இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்குவது இந்த சக்கரை வியாதிதான்.
சக்கரை அளவானது 120முதல் 140மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு இதிலிருந்து அதிகமானால் சக்கரை வியாதியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும்.
இந்த சக்கரை நோயாளிகள் திராட்சை பழம் சாப்பிடலாமா? என்ற பல கேள்விகள் இருக்கும்
சக்கரை நோயாளிகள் திராட்சை சாப்பிடலாமா?
திராட்சையானது கருப்பு, பச்சை, சிவப்பு போன்ற நிறங்களில் சுவையாக கிடைக்கின்றது.
இந்த திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் கனிமங்கள் நிறைந்துள்ளன. திராட்சை பழத்தில் ஊட்டச்சத்துக்கள் சக்கரை நோயாளிகளுக்கு நன்மைக் கொடுக்கும்.
இதில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் இது இரத்த சக்கரை அளவைக் கட்டுப்படுத்தும். திராட்சைகளில் காணப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று ரெஸ்வெராட்ரோல். ரெஸ்வெராட்ரோல் இன்சுலின் உணர்திறன் மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை மேம்படுத்தலாம், இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு திராட்சை நன்மை அளித்தாலும், ஆபத்துகளும் உள்ளன. திராட்சைகளில் இயற்கையான சர்க்கரைகள் அதிகம் உள்ளன.
பிரக்டோஸ் அதிகம் உள்ளது. இதனால் இதை அதிகமாக உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். மேலும், உலர் திராட்சையில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் தினமும் திராட்சை சாப்பிடலாம். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு தினமும் பரிந்துரைக்கப்படும் அளவு 15 சிறிய திராட்சை மாத்திரம் தான்.