கோதுமை மாவில் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த தோசை! மொறு மொறு சுவையில் உடனே சுடலாம்
கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைத் தான் அதிகம் மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
சர்க்கரை நோயாளிகள் கூட கோதுமை உணவுகளை வாரத்தில் இரண்டு முறை எடுத்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள், இன்சுலின் சுரப்பை சீராக வைப்பதற்கு கோதுமையை உணவில் சேர்த்து வருவது நல்லது.
கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் இன்று கோதுமை மாவில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு - 2 கப்
- வெங்காயம் - 3
- பச்சை மிளகாய் - 5
- சீரகம் - ஒரு டீஸ்பூன்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு
- கடுகு
- உளுந்தம் பருப்பு
- கறிவேப்பிலை
செய்முறை
சுவையான கோதுமை தோசை செய்ய முதலில் வெங்காயம் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தினை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதை கரைத்து வைத்த மாவில் சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து கல்லில் கனமாக விட்டு, இருபுறமும் எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான கோதுமை வெங்காய தோசை ரெடி.