பத்து முறை வீழ்ந்தால் பதினோராவது முறை எழுந்திடுவாய்...அதுவே வெற்றி
பொதுவாக அனைவருக்குமே இருக்கும் மிகப் பெரிய ஆசை என்னவென்றால், எப்படியாவது வாழ்வில் வெற்றியை ருசித்துவிட வேண்டும் என்பதுதான்.
அதற்காக பலரும் பல்வேறு விதமான முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறோம். ஏன் என்னால் வெற்றி பெற முடியவில்லை...எதனால் எனக்கு வெற்றிக் கனியை எட்டிப் பறிக்க முடியவில்லை என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் வேரூன்றிப் போயிருக்கும்.
image - AIche
அதற்கான காரணம் என்னவென்று நம்மையே நாம் ஒரு நிமிடம் நிதானித்து அறிந்துகொள்ள வேண்டும்.
வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும் எவ்வாறு வெற்றியடைய வேண்டும் என்பது நமது மூளையில் இருக்க வேண்டும்.
எதை செய்தால் வெற்றியின் பாதையில் பயணிக்கலாம் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். இன்பம், துன்பம், ஏற்றத் தாழ்வு நிறைந்தது வாழ்க்கை.
image - Entrepreneur
அதேபோல் வெற்றி, தோல்வி இரண்டும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. நாம் எவ்வாறு வெற்றியடைய பெரிதும் ஆர்வமாக இருக்கின்றமோ, அதேபோல் தோல்வியை ருசிக்கவும் தயங்கக் கூடாது.
மனித இனத்தின் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால் சோம்பேறித்தனமாக எதுவித முயற்சியும் செய்யாமல் இருந்துவிட்டு, என்னால் எதையும் சாதிக்க முடியவில்லையே என கலங்கி நிற்பதுதான்.
இதுவே பறவைகள், விலங்குகளை எடுத்துக்கொண்டால் கூட தனக்கான ஒரு கூட்டை அமைத்துக் கொள்வதாக இருந்தாலுமே தனது சக்தி மீறிய அளவில் முயற்சி எடுத்து ஒரு வழியாக தனக்கான தேவைகளை நிறைவு செய்து விடுகின்றன.
image - Vskills
அதேபோல் விலங்குகளை எடுத்துக் கொண்டால், தனக்கான உணவை பெற்றுக்கொள்ள என்னவெல்லாம் செய்கின்றன. இறுதியில் அதற்கான பலனையும் பெற்றுக் கொள்கின்றன.
இவ்வாறு ஐந்தறிவு படைத்த உயிர்கள் கூட வெற்றியடைய பல முயற்சிகளை செய்யும்போது, ஆறறிவு படைத்த மனிதன் வெற்றி கிடைக்கவில்லையே என ஒரு மூலையில் சோர்ந்து அமர்ந்திருந்தால் அது சரியா இருக்குமா? வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேர வேண்டும் என்றால், முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
image - Your story
பத்து முறை தோல்வியடைந்து வீழ்ந்தால்கூட பதினொராவது முறை நிச்சயமாக எழுந்துவிடலாம் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
எதையுமே முழு மனதுடன் செய்தால் அதுவே மிகப் பெரும் வெற்றிதான். நம்பிக்கையுடன் முயற்சியையும் சேர்த்து எதைச் செய்தாலுமே அது வெற்றிக்கான பாதையில் நம்மை கூட்டிச் சென்றுவிடும்.
எனவே எப்போது வெற்றி கிடைக்கும் என காத்திருக்காமல், ஒவ்வொரு நாளும் வெற்றிக்கான பாதையில் முன்னேறிச் செல்ல முயற்சி எடுப்போம்.
image - The cooliest
வெற்றி பற்றிய சிறு கவிதை வரிகள்..
- தோல்வி பட்ட உனக்குதான் வெற்றியின் அருமை தெரியும். எனவே தன்னம்பிக்கை ஒன்றை மனதில் கொண்டு வெற்றிக்காக வரிந்து கட்டு இந்த நவீன உலகத்தில்..
- இருட்டில் இருக்கின்றேன் என்று கவலைப்படாதே...இருளும் விடியலை நோக்கித்தான் செல்கிறது.
- வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான். கடமையை செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி.
- முயற்சி, பயிற்சி, நம்பிக்கையை சுகமாக சுமப்பவர்களுக்கு விழுவது கடினம் எழுவது சுலபம்.
- எட்டி விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை அதை விட்டு விடும் எண்ணத்தில் நீயும் இருக்கக் கூடாது.
- எதிர்கால வெற்றி தருணத்திற்காக இன்றைய ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்துங்கள்.
- வெற்றி எனும் வேட்கை உன்னுள் இருக்கும்வரை தோல்வி எனும் தடைகள் உன் கண் முன்னே காணப்படுவது இல்லை.
- ஒரு தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டால், அந்த தோல்வியும் வெற்றிதான்.
- வெற்றி என்பது என்னவென்றால், உன்னை விட திறமைசாலிகளுக்கு நீ கை தட்டுவது அல்ல...அனைவரையும் உனக்காக கை தட்ட வைப்பதேயாம்.
- வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
image - The senior