பாலியல் புகார் கொடுத்த பெண்.. உடனே ஆக்ஷன் எடுத்த விஜய் சேதுபதி
பாலியர் புகார் கொடுத்த பெண்ணிற்கு எதிராக விஜய் சேதுபதி செய்த செயல் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் பெற்றது.
சமீபத்தில் X தளத்தில் ரம்யா மோகன் என்ற பெண் விஜய் சேதுபதி பற்றி பாலியல் புகார் கூறி பதிவிட்டு இருந்தார்.
அதாவது, “பெண்ணொருவரை தனது கேரவனுக்கு வர வைத்த விஜய் சேதுபதி, அவருக்கு 2 லட்சம் கொடுத்தார், உடன் driveக்கு வருவதற்கு 50 ஆயிரம் கொடுத்தார். பல வருடங்களாக விஜய் சேதுபதி பயன்படுத்திக்கொண்ட அந்த பெண் தற்போது மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார்" என ரம்யா மோகன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.
விஜய் சேதுபதி கொடுத்த ரிப்ளை
இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செய்த விடயம் இணையத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதாவது,“இந்த புகார் ஆதாரமற்றது, அசிங்கமான குற்றச்சாட்டாக உள்ளது. என்னை பற்றி கொஞ்சமாக தெரிந்தவர்களுக்கு கூட இந்த புகார் உண்மை இல்லை என தெரியும். அவர்களே இதை பார்த்தால் சிரிப்பார்கள்.
மேலும், தன்னை பற்றி எல்லோரும் பேச வேண்டும் என்பதற்காக அந்த பெண் இப்படி செய்திருக்கிறார். சில நிமிடங்கள் புகழ் அவருக்கு இதனால் கிடைக்கிறது. இது பற்றி தற்போது சைபர் க்ரைமில் புகார் அளித்து இருக்கிறேன்..” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |