கழுகின் இரண்டாவது வாழ்க்கை பற்றி தெரியுமா? மறுபிறவிக்கு 150 நாட்கள் வலியுடன் போராடும் கழுகு! பலருக்கும் தெரியாத உண்மை
பறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டுமே 70 ஆண்டு ஆயுட்காலம் கொண்டது. 70 ஆண்டு காலம் வாழ வேண்டுமென்றால், அது 40 வயதில் தன்னையே உருமாற்றம் செய்ய வேண்டும்.
கழுகு தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு வளைந்து இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடுவதுடன், அதன் இறக்கைகளும் தடித்து பறப்பதற்கு கனமாக மாறிவிடும்.
இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்விற்குத் தன்னையே உட்படுத்துவது என இவை இரண்டும் தான் கழுகுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள்.
கழுகு என்ன செய்யும் தெரியுமா?
இந்தக் காலங்களில், கழுகு உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே தனித்திருக்கும்.
புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும்.
இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.
இதே போன்று வாழ்க்கையில் இதுதான் கடைசி என்று நாமும் நினைப்போம். ஆனால், அந்த வாழ்க்கையைப் புதுப்பிக்க வாய்ப்புக் கிடைக்காமல் போகாது. ஆனால், அந்த வாய்ப்பு வலியோடு வரலாம். அதைத் தாங்குவதற்குக் கஷ்டமாக இருக்கலாம்.
ஆனால், அதை ஏற்றுக்கொண்டு அதைத் தாண்டி வந்தால் நமக்கும் மறுபிறவி கிடைக்கலாம். அதற்குப் பிந்தைய வாழ்க்கை மகிழ்ச்சி மிக்கதாக மாறிவிடலாம்.
ஆதலால் வாழ்க்கையில் எந்தவொரு சூழ்நிலையும் நிரந்தரமில்லை என்பதையும், வலிகள் மிகுந்த பாடுகளை நாம் கடந்து வந்தால் பின்னே மற்றொரு மகிழ்ச்சியான வாழ்வு இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.