Siragadikka Aasai: முதன்முறையாக அம்மா கையால் சாப்பிட்ட முத்து... கண்கலங்க வைக்கும் ப்ரொமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி காவல்நிலையத்தில் கதறியழுத நிலையில், முத்து தாய் பாசத்திற்கு ஏங்கும் காட்சி அடுத்த வாரம் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
விஜயாவின் நடன பள்ளியில் ஏற்பட்ட பிரச்சனை தற்போது காவல்நிலையத்தில் முத்து இருக்கின்றார். அவரைக் காப்பாற்ற களமிறங்கிய மீனா அதிரடியாக உண்மையை கண்டுபிடித்துள்ளார்.
ஆம் சிட்டியை கைது செய்த போலிசார் ரோகினியின் பெயரையும் கூறியுள்ளார். இதனால் போலிசார் ரோகினியை அழைத்துச் சென்றுள்ளனர்.
அம்மா பாசத்திற்கு ஏங்கும் முத்து
இந்நிலையில் ஒருவழியாக ரோகினியும் காவல் நிலையத்திலிருந்து வெளிவந்த நிலையில், முத்து வயதான தாத்தாவை அன்னதானம் நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு விஜயா பெயரில் அன்னதானம் நடைபெறுகின்றது. அங்கு முத்துவும் அமர்ந்து தனது அம்மாவின் பாசத்திற்கு ஏங்கியுள்ளார்.
முத்துவைப் பார்த்த விஜயா பேரதிர்ச்சியடைந்து கோபத்தில் பார்க்கின்றார். அப்பொழுது முத்து அம்மா உங்க கையால சாப்பிடனும், பாட்டியிடம் சின்ன வயதிலேயே விட்டுட்டீங்க... அதனால இங்க வைத்து எனக்கு சாப்பாடு போடுங்க அம்மா என்று கண்கலங்கும் விதமாக பேசியுள்ளார்.
பின்பு முத்துவிற்கு சாப்பிடும் போது புரை ஏறிய நிலையில், விஜயா ஓடிவந்து தட்டிவிட வருகின்றார். இவ்வாறு அடுத்த வாரம் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |