தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
டைட்டில் வென்ற பிறகும் பெருமளவில் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் தற்போது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
டைட்டில் வின்னர் அசீம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகராக இருந்த அசீம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வாகை சூடியினார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு சர்ச்சை இல்லையென்றால் சண்டையோடு தான் ஆரம்பிப்பார். ஆனாலும் இவருக்கு வாரம்தோறும் ஆதரவாளர்கள் அதிகரித்துக் கொண்டே வந்து இன்று வெற்றியாளர் என்ற பட்டத்தையும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.
மேலும், பிக்பாஸ் இறுதிப்போட்டியில் ஷிவின், விக்ரமன் ஆகிய பிற இரண்டு போட்டியாளர்களும் பிக்பாஸ் பைனலுக்கு தகுதியாகி இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
பதிலடி கொடுத்த அசீம்
அசீமின் இந்த வெற்றிக்கு சக போட்டியாளர்களும் நெட்டிசன்களும் இவரின் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தங்களின் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வண்ணமே இருந்து வந்தனர்.
இவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் அசீம் தனது இன்ஸ்டா பக்கத்தில் கொந்தளித்து பேசியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்ததாவது,
தனக்கு கிடைத்த வெற்றியை யாரும் தங்களுடைய வெற்றியாக பார்க்கவில்லை என்ற ஆதங்கம் தான். அதேசமயம் என்னை ஜெயிக்க வைத்த மக்களுக்கு எப்போதுமே உண்மையாக இருப்பேன்.
சிலர் தோல்வியை தாங்க முடியாமல் பேசுவதை பொருட்படுத்த மாட்டேன். அதே போல் தன் மீது சுமத்தப்படும் விமர்சனங்கள் வெறும் சொற்கள் தானே தவிர, என்னை தாக்க வந்த கற்கள் அல்ல.
அந்தக் கற்களை எல்லாம் படிக்கற்களாக பயன்படுத்தி என்னுடைய இலக்கை அடைவேன். நான் செய்யப் போகும் எல்லா நற் செயல்களுக்கும் காரணமான அனைவருக்கும் நன்றி என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசீம் பேசியிருக்கிறார்.
எம் மக்களுக்கு வணக்கம்??
— MOHAMED AZEEM (@actor_azeem) January 27, 2023
சிலர் தோல்வியை தாங்க முடியாமல் பேசுவதை நாம் பொருட்படுத்த வேண்டாம்.
நம்மை நோக்கி சுமத்தப்படும் விமர்சனங்கள் வெறும் சொற்கள் தானே தவிர நம்மை தாக்கும் கற்கள் அல்ல. அதை படிக்கல்லாக பயன்படுத்தி நம் இலக்கை அடைவோம்.நாம் செய்யப்போகும் நற்செயல்கள் பல !!
நன்றி??