தொடர் இருமல் நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடையதா? இந்த அறிகுறிகளில் ஜாக்கிரதை!
பொதுவாக காலநிலை மாற்றம், நோய் தொற்றுக்கள், காற்று மாசு, குளிர்ச்சியான உணவுகள் என பெரும்பாலான காரணங்களால் அடிக்கடி இருமல் ஏற்படுவது இயல்பான விடயம்.
ஆனால் தொடர் இருமல் நுரையீரல் புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்த தெரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
துரையீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் தொடங்கும் ஒரு வகை புற்றுநோயாகும். நுரையீரலில் உள்ள திசுக்களில் கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சி ஏற்படுவதன் விளைவாகவே இந்த புற்றுநோய் எனப்படுகிறது.
இவ்வாறான உயிரணு வளர்ச்சி நுரையீரல் தவிர அருகில் இருக்கும் உயிரணுக்களில் ஊடுருவி பரவுவதால் புற்றுநோய் உடலில் பரவுவதற்கும் வழிவகுக்கிறது.இது மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயகரமானது என்பதால், இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
முக்கியமாக இதன் ஆரம்ப அறிகுறிகள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகின்றது.அதனால் புற்றுநோயின் முதல் நிலையிலேயே முறையாக சிகிச்சை பெற்று உயிரை காப்பாற்றிக்கொள்ள முடியும்.
முக்கிய அறிகுறிகள்
இருமல்: பொதுவாக சளி தொடர்பான இருமல் ஓரிரு வாரங்களில் குறையும். குறிப்பாக, மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.
நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளில் தொடர் இருமல், இரத்தம் அல்லது சளியுடன் கூடிய இருமல் என்பன முக்கிய இடம் வகிக்கின்றது.
நீடித்த இருமல், குறிப்பாக 8 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல், நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக எடுத்துக்கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மூச்சுத் திணறல்: அன்றாடப் பணிகளைச் செய்யும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், நுரையீரல் புற்றுநோய் இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம். நுரையீரல் கட்டிகள், மூச்சுக்குழாய் குறுகுதல் அல்லது மார்பில் திரவம் குவிவதால் இவ்வாறு மூச்சுத்திணரல் ஏற்படும் வாய்ப்புகள் காணப்படுகின்றது.
மார்பு மற்றும் எலும்பு வலி: மார்பு, தோள்பட்டை அல்லது முதுகு பகுதியில் தொடர்ச்சியாக வலி இருந்தால், நுரையீரல் புற்றுநோய் வலியை ஏற்படுத்தும் எலும்புகளுக்கு பரவும் வாய்ப்பு அதிகரிக்கும் என எச்சரிக்கப்படுகின்றது.
மேலும் புற்றுநோய் மூளைக்கு பரவியிருந்தால், பல நரம்பியல் அறிகுறிகள் மற்றும் தலைவலிகள் இருக்கலாம். இவ்வாறு தொடர்ந்த வலி குறையாமல் இருந்தால் அதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது.
குரலில் மாற்றம் : குரல் ஆழமாகவும், கரகரப்பாகவும் மாறியிருப்பதை நீங்கள் கவனித்தால் அல்லது வேறு ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டால், அது ஒரு சாதாரண சளியாக இருக்கலாம். ஆனால் இந்த நிலை தொடர்ந்தால் நிச்சயம் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
நெஞ்சு தொற்றுகள்: உடல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு பதிலளிக்காமல், தொடர்ச்சியான மார்பு தொற்று, சளியில் இரத்தம் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் தொற்று நிமோனியா தொடர்ந்து வருவது நுரையீரல் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாக அறியப்படுகின்றது.
எடை இழப்பு : உடல் சோர்வு பசியின்மை, எடை இழப்பு ஆகியவை பல்வேறு புற்றுநோய் வகைகளுடன் தொடர்புடையவை. எனவே இவ்வாறான அறிகுறிகள் இருப்பின் அலச்சியப்படுத்தாது உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது எவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |