மனஅழுத்தம் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்
மன அழுத்தம் பிரச்சனையை நாம் எவ்வாறு மேற்கொண்டு அதிலிருந்து மீள்வது என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மன அழுத்தம்
மனசோர்வு மற்றும் மன அழுத்தம், மன பதற்றம், மனக்கவலை இந்த பாதிப்புகள் பெரும்பாலான நபர்களை பாதித்து வருகின்றது.
இவ்வாறான பிரச்சனைகளை நாம் சந்திக்கும் போது, எந்தவொரு மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் உளவியல் ரீதியான சிகிச்சையில் சரியாகிவிடுவது தான் சிறந்தது.
தற்போது அவ்வாறான சிகிச்சைகள் தான் அதிகமாக அளிக்கப்பட்டு வருகின்றது. மனதை எல்லா சூழலிலும் மனதை உற்சாகமாக வைத்துகொள்ள வேண்டும்.
நான் ஒன்றிற்கு 20 நிமிடம் ஒதுக்கிய சில பயற்சிகளை மேற்கொண்டால், இதனைத் தூண்டும் ஹார்மோன்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்துவிடுவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மன அழுத்தம் நம்மை என்ன செய்யும்?
மன அழுத்தமானது தூக்கமின்மையில் தொடங்கி, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் என ஒவ்வொன்றாக வந்து விடுகின்றது.
இதய நோய்கள் வரை ஏற்படுத்துவதுடன், உடல்ரீதியான பிரச்சனையாக மனநல பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகின்றது.
தீவிர மன அழுத்தத்திற்கு சிகிச்சை மட்டுமே சிறந்த வழியாகும். அவ்வப்போது பிரச்சனையை அடையாளம் கண்டு அதிலிருந்து மீண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும்.
நம் சிந்தனையை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும். அப்படி சிந்தனை திசை திரும்பும் நேரத்தில் நாம் செய்கிற பயிற்சிகள் நமக்குப் பிடித்ததாக, நம் கவலைகளை மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அதில் என்னென்ன செயல்களை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
அதிகாலை விழிப்பு
மன அழுத்தத்தில் இருக்கும் போது எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருப்பதை விட்டுவிட்டு, அதிகாலை அல்லது 7 மணிக்காவது எழுந்திருக்க வேண்டும். விழிப்பு வந்ததும் உடனே படுக்கையை விட்டு எழுந்திருக்கவும். ஏனெனில் இவை மேலும் உங்களை அசதியில் ஆழ்த்தும்.
மூச்சு பயிற்சி மற்றும் உடற்பயிற்சி
வீட்டில் இருக்கும் போது நடைபயிற்சி மேற்கொள்ளவதற்கு நீங்கள் விரும்பவில்லை எனில், ஒரு பத்துமுறையாவது மூச்சுப்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். அதிகாலையில் வீட்டின் மொட்டை மாடியில் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து கொண்டு மூச்சை ஆழமாக இழுத்து பொறுமையாக விட வேண்டும். ஏனெனில் இந்த சுத்தமான பிராண வாயுவால் மனம் மற்றும் உடல் இரண்டையும் ஆரோக்கியமாக வைக்கின்றது.
மூச்சுப்பயிற்சியை எப்படிச் செய்வது?
நேராக நிமிர்ந்து உட்கார்ந்து, கண்களை முடிக்கொள்ளவும். கைகளை அடி வயிற்றில்படும்படி வைத்துக்கொண்டு, ஆழமாக மூச்சை இழுத்து, மெதுவாக வெளியேவிடவும்.
இப்படிச் செய்யும்போது அடிவயிற்றின் அசைவுகளை உணர முடியும். இதனால், கவனம் முழுவதும் அதில் குவிக்கப்பட்டு, உடலும் மனமும் தளர்வடைந்து இயல்புநிலையை அடையும்.
மேலும், இதய துடிப்பு சீராக இருப்பதால், ரத்த அழுத்தம் குறையும்; மனஅழுத்தம் நீங்கும். இந்தப் பயிற்சியை 5லிருந்து 10 நிமிடங்களுக்குச் செய்யலாம்.
தியானம்
தியானம் மேற்கொள்வது மிகவும் முக்கியமாகும். ஐந்து நிமிடங்கள் எதையும் சிந்திக்காமல் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யவும்.
ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் குறைந்த நாட்களில் மனம் உங்கள் கட்டுக்குள் வருவதை உணர்வீர்கள்.
இதனால் மனதுக்குள் தாழ்வு மனப்பான்மை விலகும். உறுதியும் உற்சாகமும் அதிகரிக்கும், உங்கள் மீதான நம்பிக்கை இரட்டிப்பு மடங்கு அதிகரிப்பதை அனுபவப்பூர்வமாகவே உணரலாம்.
மூன்று வேளை சத்தான உணவு
மனதில் சோர்வு இருந்தால் பசியின்மை இருக்கவே செய்யும். ஆனால் பசி இல்லை என்பதற்காக சாப்பிடாமல் இருந்துவிடக்கூடாது. மூன்று வேளையும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக மெக்னீஷியம் கலந்த உணவையும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் உணவையும் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். எந்த காரணம் கொண்டும் உணவு சாப்பிடாமல் இருப்பதோ, காலம் தாழ்த்தி உணவை எடுத்துக் கொள்வதோ கூடாது.
மேலும் வீட்டில் இருந்து விலகி சற்று தூரம் வெறும் காலால் நடந்து செல்ல வேண்டும். இதமான காற்று உங்களது முகத்தில் படும் போது, பூமியோடு தொடர்பில் இருக்கிறோம்... நெருக்கமாக இருக்கிறோம்... என்று உங்களை கற்பனை செய்து கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டால் உங்களது மனஅழுத்தம், டென்ஷன் குறையும்.
நீர்ச்சத்து அவசியம்
உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம் ஆகும். மேலும் நீர்ச்சத்துக்காக தண்ணீர் மட்டுமின்றி பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம். உரிய இடைவேளையில் பழச்சாறுகள் சோர்விலிருக்கும் மூளையை தட்டி எழுப்பி உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
ஓவ்வொரு வேலைக்கு நடுவிலும் உங்களை சோர்விலிருந்து நீக்கி உடனடியாக புத்துணர்ச்சி பெற தினமும் 2 டம்ளர் பழச்சாறு எடுத்துகொள்ளுங்கள். ஆரோக்கியம், மன சோர்வு நீக்கி புத்துணர்ச்சி பெறுவதோடு இளமையாகவும் அழகாகவும் இருக்க வைக்கவும் உதவும்.
leptospirosis symptoms: மனித குலத்துக்கு எமனாகும் பாக்டீரியா! லெப்டோஸ்பைரோசிஸ் அறிகுறிகள் எப்படியிருக்கும்?
பிடித்ததை செய்யுங்கள்
வீட்டில் எப்பொழுதும் குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்புகளை தலையில் அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள், சிறிது நேரம் ஒதுக்கி உங்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டும்.
எப்போதும் வேலை என்று ஓடிக்கொண்டிருந்தால் மூளையும் மனமும் ஓயாமல் சிந்தித்து அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும். அதனால் அரை மணி நேரம் உங்களுக்காக ஒதுக்கி, உங்களுக்கு பிடித்த கைவேலை, பாட்டு கேட்பது, புத்தகம் படிப்பது இவற்றினை செய்யவும்.
குடும்பத்தினருடன் நேரம்
வீட்டில் குடும்ப உறுப்பினருடன் இருந்தாலும், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது இல்லை. ஒருவர் போனிலும், ஒருவர் டீவியிலும், ஒருவர் புத்தகத்திலும், லேப்டாப் என்று நேரத்தை செலவழித்து வருகின்றோம்.
கிடைக்கும் இந்த நேரத்தில் வேலைகள் முடிந்ததும் குறைந்தது ஒரு மணி நேரமாவது பிடித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் மனதில் அழுத்தியிருக்கும் பல விஷயங்களும் தளர்ந்து இலேசாக கூடும்.
சிரிப்பு முக்கியம்
மன அழுத்தத்தில் இருக்கும் போது, இதற்கு காரணமான கார்ட்டிசால் என்ற ஹார்மோன் உடம்பில் அதிகமாக சுரக்கும். அதே நேரத்தில் நீங்கள் சிரிக்கும் நேரத்தில் இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்து, மூளையைத் தூண்டுவதற்கு உதவும் எண்டார்பின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகுமாம்.
எனவே, புன்னகை மிகச் சிறந்த மருந்து என்பதைப் புரிந்துகொள்ளுக்கள். இதற்காக நகைச்சுவை சினிமாக்கள், வீடியோக்களைப் பார்க்கலாம்; மேலும் நகைச்சுவையாக இருப்பவர்களுடன் நேரத்தினை செலவிட வேண்டும். சிரிப்பு இருந்தாலே மன உளைச்சலை அகற்றி விடலாம்.
வேலையில் சோர்வு கூடாது
வீட்டு வேலையாக இருந்தாலும், அலுவலக வேலையாக இருந்தாலும் வேலையில் சோர்வு மட்டும் இருக்கக்கூடாது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் போதே மனம் சோர்வுக்கு போகும். அதனால் முதல் நாளே வேலையை திட்டமிடுங்கள்.
கடினமாக உங்களுக்கு சலிப்பும் வெறுப்பும் தரும் வேலையை எப்போதும் ஒதுக்கி வைக்காதீர்கள். இவை தள்ளி போக போக மனதில் அழுத்தம் தான் அதிகரிக்கும்.
மாறாக முதல் வேலையாக உங்களுக்கு கடினமான வேலையாக இருப்பதை எடுத்து செய்வதன் மூலம் விரைவாகவும் முடிக்கலாம். இதனால் அடுத்தடுத்த வேலையையும் சுலபமாக முடிப்பீர்கள்.
Image: GETTY
கெட்டபழக்கம் வேண்டாம்
சிகரெட், மது மற்றும் போதைக்கு அடிமையாவதை தவிக்க வேண்டும். இவற்றினை பயன்படுத்தினால் தான் மனம் இலேசாக இருப்பது போன்று நீங்கள் உணர்ந்தால் அது மிகப்பெரிய முட்டாள் தனமாகும்.
ஏனெனில் இலேசாக்கும் என்று சொல்லகூடிய இந்த மோசமான பழக்கம் தற்காலிகமாக சோர்வை விரட்டி அடிக்காது. மறக்கவே செய்யும். பிறகு அதிகப்படியான மோசமான மனநிலைக்கு தள்ளிவிடும்.
மன அழுத்தத்திற்கு வரமாகிய இசை
இசை வெறும் பாடல் வரிகள் மட்டும் அல்ல... மனதுக்கு உதவக்கூடிய மருத்துவ உண்மை. நாம் ரசித்துக் கேட்கும் மெல்லிய இசை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதயத் துடிப்பைச் சீராக்கவும், பதற்றம், கவலைகளைக் குறைக்கவும் செய்கின்றது.
இதை பல ஆய்வு முடிவுகளே கூறியுள்ளது. மேலும் எப்படிப்பட்ட பதற்றத்தையும் குறைத்து மனதை அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு.
நீங்கள் சாதாரண பாத்ரூம் சிங்கராகக்கூட இருக்கலாம். வீட்டுக்குள்ளேயே அறைக்குள் உங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பாடிப் பார்க்கலாம். மனம் லேசாகும்.
சாக்லேட்
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை டார்க் சாக்லேட் சாப்பிடுவது, மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோன்களைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றது.
சாக்லேட்டைச் சாப்பிடும்போது வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள்; அதன் ருசியை, இனிமையை அனுபவித்து ருசியுங்கள். இதுகூட ஒரு மனப்பயிற்சிதான். மன ஆரோக்கியம் காக்க சாக்லேட்டும் உதவும்.
Image: Stocksy United
கிரீன் டீ
கிரீன் டீயில் உள்ள அமினோ அமிலம், தியானின் ஆகியவை மூளையை அமைதிப்படுத்தும் வல்லமை கொண்டவை. ஆனால் இவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் பிரச்சனை ஏற்படும்.
எனவே, ஒரு நாளைக்கு நான்கு கப்புக்கு மிகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. இப்படி ஆறு வாரங்களுக்குத் தொடர்ந்து கிரீன் டீ குடித்தால், அது மனஅழுத்தத்துக்குக் காரணமாகும் கார்ட்டிசால் ஹார்மோன் சுரப்பை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றது.
Image Credit: Shutterstock.com
மந்திர வாசகம்
பாசிட்டிவ்வான வாசகங்களை பார்க்கும் போதே உங்களுக்கு உற்சாகம் ஏற்படும். உங்களுக்கு பிடித்த சிறந்த மேற்கோள்களை எழுதி வைத்துக் கொண்டு அதை அப்படியே செய்யவும் வேண்டும்.
என்னால் முடியும், நடப்பதெல்லாம் நன்மைக்கே என இப்படிப்பட்ட வாசகமாகவும் இருக்கலாம். இந்த வாசகங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மனதுக்கு சக்திதரும் மந்திரங்களாக அவை மாறும். விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.
இரவு தூக்கம்
விடுமுறை நாளாக இருந்தாலும் வேலை நாளாக இருந்தாலும் தினமும் இரவு தூங்கும் நேரத்தை சரியாக பின்பற்றுங்கள். உறங்குவதற்கு முன்பு ஒரு குட்டி குளியல் போடுவதும் ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும்.
தூக்கம் வரவில்லை என்று ஃபோனிலும், தொலைக்காட்சியிலும் மூழ்கி இருப்பதால் மறுநாள் வேலையில் ஈடுபட முடியாமல் மனமும் உடலும் சோர்வை சந்திக்கவே செய்யும்.
குறிப்பிட்ட நேரத்தில் படுக்கையில் இருங்கள். தூக்கம் வரும் வரை பிடித்த புத்தகத்தை படியுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |