இந்த இடங்களில் உணவுகள் சூப்பரா இருக்குமாம்...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பொழுதுபோக்கு காணப்படும். அவற்றில் ஊர் சுற்றுவதும் ஒன்று. பொதுவாகவே ஒரு சிலருக்கு புதிய ஊர்களைப் பார்ப்பதற்கும் அங்குள்ள புதிய விடயங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
அதிலும் உணவுக்காகவே சில இடங்களுக்குச் செல்லலாம். அவ்வாறான இடங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
image - News 18
உடுப்பி
அரிசி, பருப்பு என்று மாவினால் சுடப்படும் கொங்கனி வகை தோசைகள் இங்கு சிறப்பானதாகக் காணப்படுகின்றது.
image - News 18
லடாக்
சுட்டாகி, துகபா,டிங்மோ என சுவையான உணவுகள் காணப்படும்.
image - News 18
ராஜஸ்தான்
இது ராஜபோக உணவுக்கு பெயர் போனது. கேட்டேகி சப்ஜி இதில் பிரச்சித்தமான உணவு.
image - Chef's Pencil
கேரளா
இங்கு புட்டு - கடலக்கறி, இடியப்பட், அப்பம் போன்றவையும் அசைவ உணவுகளில் மீன் மாங்கா கறி, கரிமீன் பொலிச்சது, கோஜி பொரிச்சது போன்ற உணவுகளும் சைவ உணவுகளில் எரிச்சேரி, ஓலன், உள்ளி தேய்த்தல், வெள்ளரிக்காய் கிச்சடி என்பனவும் அடப்ரதமன், சட்டி பத்திரி, பலா பாயாசம் போன்ற இனிப்பு வகைகளும் பிரசித்தமானவை.
image - Easy weeknight Recepies
கோஹிமா
இங்கு புளித்த மூங்கில் தளிர்களால் சமைக்கப்படும் பன்றி இறைச்சி மிகவும் பிரசித்தி பெற்றது.
image - India Tv News
மேக்லியாட் கஞ்ச்
மோமோஸ், துக்பா மற்றும் அடுப்புகளில் செய்யப்படும் பீட்ஸாக்கள் இங்கு மிகவும் பிரச்சித்தமானவை.
image - News 18
கின்னூர்
இதில் ராஜ்மா மற்றும் பச்சை பட்டாணி என்பவை சேர்த்து செய்த கின்னூர் கிரேவி சிறப்பு வாய்ந்தது.