ஈஸ்வரிக்கு வந்த அழைப்பு.. குணசேகரனுக்கு செக் வைத்த மனைவி- இனி என்ன நடக்கும்?
ஈஸ்வரிக்கு வந்த அழைப்பை பயன்படுத்தி குணசேகரனுக்கு ஈஸ்வரி செக் வைத்துள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த குணசேகரன் தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அதே சமயம், வீட்டிலுள்ள பெண்களையும் ஹோட்டல் தொழில் செய்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அறிவுக்கரசியின் பாதுகாப்பில் இருந்த தர்ஷன் மற்றும் ஊரை விட்டுச் சென்ற பார்கவி அவரது தந்தை அனைவரும் கொடைக்கானலில் ஜீவானந்திடம் சேர்ந்துள்ளனர்.
செக் வைத்த ஈஸ்வரி
இந்த விடயம் அறிவுக்கரசி மற்றும் குணசேகரன் குடும்பத்தினர் தெரிய வரும் பொழுது தர்ஷனை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என அடியாட்களை வைத்து முயற்சி செய்தனர். ஆனாலும் பலன் இல்லாமல் ஜீவானந்தம் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்.
இந்த விடயம் குறித்து ஜீவானந்தம், ஈஸ்வரிக்கு கோல் செய்து கூறும் பொழுது ஜனனியுடன் சேர்ந்த மருமகள்கள் குணசேகரனுக்கு செக் வைத்துள்ளனர்.
மகனை அறிவுக்கரசி தங்கைக்கு திருமணம் செய்து தன்னுடைய மானத்தை காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் குணசேகரனுக்கு இது பெரிய அடியாக மாறியுள்ளது.
அதே சமயம், ஜனனி போட்ட பிளானால் வீட்டிலுள்ள அனைவரும் வாயடைத்து போயுள்ளனர்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |