அசைவ உணவு சாப்பிட்டால் கடிக்கும் பாம்பு! இந்தியாவில் ஓர் அதிர்ச்சி கிராமம்
அசைவ உணவு சாப்பிட்டால் உடல் நிலையில் பிரச்சினையும், பாம்பு கடித்துவிடும் என்பதால் இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் அசைவம் சாப்பிடாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இன்று பெரும்பாலான மனிதர்களின் உணவுப் பட்டியலில் அதிகமாக இடம்பெற்று வருவது அசைவம் தான். அந்த அளவிற்கு அசைவ உணவிற்கு மக்கள் அடிமையாகி வருகின்றனர்.
ஆனால் இங்கு ஒரு கிராமம் முழுவதும் இருக்கும் மக்கள் அசைவ சாப்பாடு சாப்பிடுவதில்லையாம். இதற்கு அவர்கள் கூறியுள்ள காரணம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அசைவம் சாப்பிடாத கிராமம்
ஒடிஷா மாநிலம், தெங்கனல் மாவட்டத்தில் பென்டசாலியா என்னும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தான் இவ்வாறு அசைவம் சாப்பிடாமல் வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வாறு அசைவ உணவு சாப்பிட்டால் உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகவும், பாம்பு கடிப்பதாகவும் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், தங்களது நம்பிக்கையை மீறி எவரேனும் அசைவ உணவு சாப்பிட்டால் கண்பாதிப்பு, உடல் பாதிப்பு ஏற்படுவதாகவும், அவ்வாறு சாப்பிட்டால் உடனடியாக கோவிலுக்கு சென்று அங்குள்ள சாமியாரிடம் பூஜை செய்துவிட்ட பின்பே வீடு திரும்புவார்களாம்.
மேலும் இந்த கிராமத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கூட அசைவு உணவு வகைகள் இடம்பெறாது என கூறப்படுகிறது.
இளைஞர் ஒருவர் கூறுகையில், அசைவம் சாப்பிட்டால் உடல்நலப் பிரச்சினை, பாம்பு கடிக்கும் என்பதால் அசைவ உணவை சாப்பிடாமல் வெறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக அசைவ உணவுகளை தவிர்த்து வரும் கிராம மக்களின் வினோத காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.