குளிக்கும் பொழுது போடுங்க.. இளநரைக்கு இன்றுடன் முடிவு- வீட்டிலேயே டை செய்வது எப்படி?
இளம் வயதிலேயே நரைமுடி ஏற்படுவது தற்போது உள்ளவர்களுக்கு சாதாரணமாகி விட்டது. நரைமுடி வந்து விட்டால் அது பற்றிய கவலை குறைந்து விட்டது. ஏனெனின் கருப்பாக மாற்றுவதற்கு ஹேர் டைச் செய்து பயன்படுத்தலாம்.
பக்க விளைவுகள் இல்லாத ஹேர் டை உண்டா? என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கடைகளில் விற்கப்படும் ஹேர் டைகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இந்த பிரச்சினையுள்ளவர்கள் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு இயற்கையான முறையில், ஹேர் டை செய்து பயன்படுத்தலாம்.
தலைமுடியும் கருப்பாக இருக்கும், அதே சமயம் பாதிப்பு அபாயமும் குறைவு. கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹேர் டைகளால் சரும அரிப்பு, கண் இமைகளில் வீக்கம், முகம் உரிதல், சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
அந்த வகையில், பக்க விளைவுகள் இல்லாமல், இயற்கையாகவே தலைமுடியை கருமையாக்கும் வழிமுறைகள் என்னென்ன என்பதையும் சித்த மருத்துவரின் பரிந்துரையின்படி, எப்படி ஹேர் டை தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- மருதாணி பொடி
- அவுரி இலை பொடி
- திரிபலா சூரணம்: கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றின் கலவை
- எலுமிச்சை சாறு
- கிராம்பு பொடி - அரை ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
மருதாணி பொடி, அவுரி பொடி, திரிபலா சூரணம் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து கலந்து கொள்ளவும். இரவில் இந்த கலவையுடன் டீ டிகாஷனுடன் கெட்டியாக கொதிக்க வைத்து கலந்து கொள்ளவும்.
அந்த நீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில், இந்தக் கலவையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் அரை ஸ்பூன் கிராம்பு பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதன் பின்னர், நரைமுடியை நன்றாக அலசி விட்டு இந்த கலவையை நன்கு முடிகளுக்கு படும்படி கலந்து விட்டு, 2-3 மணி நேரம் ஊறவிடவும். கடைசியாக தலைமுடியை நன்கு அலசவும்.
முதல் முறை பயன்படுத்தியதும் 50-60% நரைமுடி மறைந்திருப்பதை காணலாம். அடுத்த நாளும் இந்த முறையை பின்பற்றவும். தொடர்ந்து இவ்வாறு செய்து வருவதன் மூலம் நரைமுடி படிப்படியாகக் குணமாகும்.
மருதாணி தலைக்கு பயன்படுத்தும் பொழுது இயற்கையான செந்நிறம் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |