நிகழ்ச்சியின் நடுவே கதறி அழுத பிரபலங்கள்: காரணம் என்ன தெரியுமா?
பொழுதுபோக்கு நிகழ்சிகளில் விஜய் டீவியை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை. சிறந்த பொழுதுபோக்கு சேனல்களில் விஜய் டிவிக்கும் மிக பெரிய பங்கு உண்டு. கலக்கப்போவது யாரு , சூப்பர் சிங்கர் , குக்கு வித் கோமாளி , அது இது எது என பல ஹிட் நிகழ்ச்சிகளை கொடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது குழந்தைகளை கவரும் வண்ணம் புதிய நிகழ்ச்சி ஒன்றை துவங்கியுள்ளனர்.
star kids என்ற புதிய நிகழ்ச்சியை கொண்டுவந்துள்ளது. இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் தங்களின் குழந்தைகளோடு கலந்துகொண்டுள்ளனர். தற்போது இந்த நிகழ்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பிரியங்கா , மணிமேகலை , தீபா , அறந்தாங்கி நிஷா , ஈரோடு மகேஷ் , ராமர் , பாலா , சூப்பர் சிங்கர் ராஜா லட்சுமி என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ப்ரோமோவில் அனைவரும் தங்களது பிள்ளைகளை எவ்வளவு மிஸ் செய்கிறார்கள் என்று கூறி அழுகின்றனர். அதிலும் நிஷா என் குழந்தை என்கிட்ட வரவே மாட்டாள் என்று கண்ணீருடன் கூறியிருந்தார். அதோடு பலரும் தங்களின் மகள்களை பற்றி கூறினார்கள். இறுதியாக ஈரோடு மகேஷும் தன் பிள்ளைகளை மிஸ் செய்வதாக கூறி கண்கலங்கினார்.