கருப்பு அரிசியில் தோசை செய்ததுண்டா?
வழமையாக செய்து உண்ணும் தோசைகள் போல் அல்லாமல் அதில் சற்று சத்தான பொருட்களையும் சேர்த்து சுவையுடன் சத்தையும் பெற்றுக் கொள்ளலாமே...
சற்று வித்தியாசமாக கருப்பு அரிசியில் தோசை செய்து உண்ணலாமே... இந்த அரிசியில் குறைந்த அளவு கலோரிகள், அதிக அளவு நார்ச்த்து என்பன உள்ளன. கெட்ட கொலஸ்ட்ரோலை குறைக்கும்.
தேவையான பொருட்கள்
கருப்பு அரிசி - 1 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உளுந்து - கால் கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வெந்தயம், கருப்பு அரிசி, உளுந்து என்பவற்றை 4 மணிநேரம் தண்ணீரில் ஊறவிட்டு, மிக்சியில் போட்டு அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
பின்னர் புளிக்க வைத்த மாவை தோசைகளாக வார்த்து எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டெடுக்கவும்.
அருமையான கருப்பு அரிசி தோசை தயார்.