கவர்ச்சி உடையை வைத்து மட்டும் என்னை மதிப்பிட வேண்டாம்: பிக்பாஸ் பிரபலத்தின் சிறப்பான பதில்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஷிவினின் கவர்ச்சி உடையை வைத்து கமெண்ட செய்தவருக்கு நல்ல பதில் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
பிக்பாஸ் ஷிவின் கணேசன்
திருநங்கையான ஷிவின் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் பிக்பாஸ் போட்டியில் இறுதிவரை சென்று சாதனைப்படைத்தவர்.
மேலும், இவர் ஒரு மாடல் ஆவார். பல பிரச்சினைகளுக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்டு ஆரம்பத்தில் இருந்து மிகச் சிறப்பாக விளையாடி வந்தார்.
இவர் பல அவமானங்கள், கிண்டல்களை சந்தித்தாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு தைரியமாக விளையாடி இறுதியில் பிக்பாஸில் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
பிக்பாஸிற்கு பிறகு கடைத்திறப்பு விழா, சீரியல்கள் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் தற்போது பங்கு பற்றி வருகின்றார்.
ஆடையில் ஒன்றும் இல்லை
இந்நிலையில் ஷிவின் நடத்திய போட்டோ ஷூட் இணையத்தில் அதிகம் வைரலாகி வந்த நிலையில் அவரின் புகைப்படத்திற்கு ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமூகம், குடும்பத்தினர் உங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தீர்கள்.
நாங்கள் உங்களை குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறோம். ஆனால் நீங்கள் இப்படி உடை அணியும் போது உங்களை ரோல் மாடலாக எடுத்துக் கொண்ட பலரையும் பற்றி யோசியுங்கள்.
எனினும் இது உங்கள் வாழ்க்கை. ஒரு சகோதரராக இதை நான் சொல்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும் என்று கமெண்ட செய்திருந்தார்.
அவரின் கமெண்டுக்கு பதிலளித்த ஷிவின், உங்கள் பாசத்திற்கும் மரியாதைக்கும் ரொம்ப நன்றி அண்ணா. இதில் தவறாக எடுத்துக் கொள்ள எதுவுமில்லை.
ஒருவரை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அது அவரின் ஆடையில் இல்லை எண்ணங்களில் தான் இருக்கிறது. உடுத்தும் உடைக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
மேலும், உடையை வைத்து எதையும் ஜட்ஜ் பண்ணாதீங்க என கூலாக பதிலளித்திருக்கிறார்.