பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸில் களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்: நடிப்பிற்கு அஸ்திபாரமிட்ட நடிகை!
இறுதி கட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா கிளைமாக்சில் பிக்பாஸ் பிரபலம் ஒருவரை இறக்கியிருக்கிறார் இயக்குனர்.
பாரதி கண்ணம்மா
பிரபல தொலைக்காட்சியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து டி.ஆர்.பி. ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்து விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருந்தது. என்று பாரதி கண்ணம்மா மீது சந்தேகம் கொண்டு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று ஆரம்பித்தாரோ அன்றோடு இந்த சீரியலுக்கு என்டு கார்ட் போட வேண்டும் என மக்கள் புலம்ப ஆரம்பித்தார்கள்.
எவ்வாறோ கதையை நகர்த்திக்கொண்டு செல்லும் வேலையில் கண்ணம்மாவாக நடித்த ரோசினி விலகிசெல்லவே ரோசினி போலவே தோற்றம் கொண்ட புதிய கண்ணம்மாவை இறக்கினார்கள்.
அவரும் எவ்வித மாற்றமும் இல்லாமல் நடித்துக்கொடுத்ததார். இடைக்கிடையில் ஏற்படும் வெண்பாவின் ஆர்வகோளாறாக ஐடியாவால் கதை கொஞ்சம் கொஞ்சம் சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்தது.
இந்நிலையில் கதைக்கு என்ட்கார்ட் போட்டு விடுவோம் என முடிவெடுத்துவிட்டார் போல இயக்குனர். அதனால் இறுதிக்கட்டத்திலும் பல ட்டுவிஸ்டுகளை வைத்து இந்த சீரியல் முடியவே முடியாது என புலம்பவைத்து விட்டார்.
ஆனால் தற்போது சீரியல் முடியப்போகிறது என்று உத்தியோகப்பூர்வ அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் ஷிவின்
பல திருப்பங்கனை கொண்டு இறுதிக்கட்டத்திற்குள் நுளைந்த பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமாக்சில் பிக்பாஸ் ஷிவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருநங்கையான ஷிவின் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் பிக்பாஸ் போட்டியில் இறுதிவரை சென்று சாதனைப்படைத்தவர்.
மேலும், இவர் ஒரு மாடல் ஆவார். பல பிரச்சினைகளுக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்டு ஆரம்பத்தில் இருந்து மிகச் சிறப்பாக விளையாடி வந்தார்.
இவர் பல அவமானங்கள், கிண்டல்களை சந்தித்தாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு தைரியமாக விளையாடி இறுதியில் பிக்பாஸில் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
இவர் தற்போது பாரதி கண்ணம்மா கிளைமாக்சில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இது அவரின் நடிப்பிற்கு அத்திவாரம் என அவரின் ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.