10 வாரங்களாக நாமினேஷனில் கூட வரவில்லை! பிக்பாஸை அசத்தும் போட்டியாளர் யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 6ல் வெற்றியாளராக ஷிவின் கணேசன் மகுடம் சூடுவார் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து 6வது சீசன் இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மற்ற சீசன்களை காட்டிலும் சண்டைகள் அதிகம் இருந்தாலும் போட்டியாளர்கள் பாதுகாப்பாக விளையாடிவருவதாக பலரும் குற்றம்சுமத்தி வருகின்றனர்.
அசிம், விக்ரமன், தனலட்சுமி, ஷிவின் கணேசனை தவிர மற்ற அனைவரும் சேஃப் கேம் விளையாடுவதாகவே கூறப்படுகிறது.
இவர்களில் மிக திறமையானவராக பார்க்கப்படுபவர் ஷிவின் கணேசன், இவர் ஒரு திருநங்கை.
மொடலிங் மற்றும் ஐடி துறையில் பணியாற்றி வரும் ஷிவின் கணேசன் சிறந்த போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.
ஒரு பிரச்சனையை அணுகுவதில் தொடங்கி ஒவ்வொரு டாஸ்கில் தனித்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
வீட்டில் நடக்கும் பிரச்சனைகளில் தலையிட்டு நியாயமான நேர்மையான கருத்துகளை வழங்கியும் வருகிறார்.
10 வாரங்களை கடந்தும் ஒருமுறை கூட நாமினேஷனில் வராமல் கெத்து காட்டுகிறார் ஷிவின் கணேசன்.
2021ம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் ஷிவின் என்பது குறிப்பிடத்தக்கது.