திருநங்கை ஷிவின் வாழ்க்கையில் முளைத்த காதல் பிரிந்தது எப்படி? காதலர் தற்போது எங்கு இருக்கிறார் தெரியுமா?
பிக் பாஸில் விளையாடி வரும் திருநங்கை ஷிவின் வாழ்க்கையில் முளைத்த காதல் கதையை கேட்டு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் தனது நெருங்கிய தோழியான ரக்சிதாவிடம் ஷிவின் தனது காதல் கதையை முதல் முறை கூறியுள்ளார்.
ஷிவின் ஐடியில் வேலை பார்த்தபோது ஒருவருடன் நட்பாக பழகியுள்ளார்.
அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
பிரிந்து போன காதல்
தங்கள் காதல் பிரச்சினை இல்லாமல் நன்றாக சென்று கொண்டு இருந்த போது ஷிவின் அம்மா காதலிப்பதை கண்டுபிடித்து விட்டாராம்.
பிறகு காதல் எல்லாம் உனக்கு வேண்டாம், உன்னை பற்றிய விஷயம் அவங்க குடும்பத்துக்கு தெரிந்தால் உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த குடும்பத்தின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
திருநங்கை ஷிவின் அம்மாவின் பேச்சை கேட்டு தனது காதலை மறந்து விட்டதாக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடன் தனது காதலர் அடிக்கடி பேச முயற்சி செய்தபோதிலும் தான் அவரிடம் பேசவில்லை என்றும் ஷிவின் தெரிவித்துள்ளார்.
ஷிவினுடைய காதலர் எங்கே?
ஷிவினுடைய காதலர் தற்போது சிங்கப்பூரில் இருப்பதாகவும் ஒருசில கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பதாக கேள்விப்பட்டேன் கலையடைந்துள்ளார்.
மேலும், அவர் ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றும் கண்ணீருடன் ஷிவின் தெரிவித்திருப்பது பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.
ரக்சிதா ஷிவினின் காதல் கதையை கேட்டு அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சில காதல் எதற்காக பிரிகின்றது என்ற காரணம் பலருக்கு தெரியாது. ஆனால், பின்னணியில் ஷிவினின் வாழ்க்கையில் நடப்பது போன்ற ஆழமான உண்மைகள் புதைந்து கிடக்கும்.
இதற்கு ஒரு வகையில் சுயநலமற்ற தியாகம் என்று கூட சொல்லலாம்.