திருநங்கை சர்ஜரி பற்றி விரிவாக அப்படியே சொன்ன பிக்பாஸ் ஷிவின்: முழுமையாக மாற 2 ஆண்டுகள் ஆகுமாம்!
பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவின் தான் சர்ஜரி செய்துக் கொண்டது பற்றி விரிவாக கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் ஷிவின்
திருநங்கையான ஷிவின் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் பிக்பாஸ் போட்டியில் இறுதிவரை சென்று சாதனைப்படைத்தவர்.
மேலும், இவர் ஒரு மாடல் ஆவார். பல பிரச்சினைகளுக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்டு ஆரம்பத்தில் இருந்து மிகச் சிறப்பாக விளையாடி வந்தார்.
இவர் பல அவமானங்கள், கிண்டல்களை சந்தித்தாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு தைரியமாக விளையாடி இறுதியில் பிக்பாஸில் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
பிக்பாஸிற்கு பிறகு கடைத்திறப்பு விழா, சீரியல்கள் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் தற்போது பங்கு பற்றி வருகின்றார்.
திருநங்கைகள் செய்துக் கொள்ளும் சர்ஜரி
திருநங்கைகள் செய்து கொள்ளும் HRT (Hormone Replacement Therapy)செய்து கொள்ளவே 2 ஆண்டுகள் ஆகுமாம்.
அதற்குப் பிறகு சைக்காலஜி மருத்துவரிடம் கவுன்சிலிங் செல்ல வேண்டும் மேலும், இம்பிளாண்ட்ஸ் செய்து கொள்வது, SRS (sex reassignment surgery) உள்ளிட்டவற்றை முறையாக செய்து கொள்ள வேண்டும்.
இது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நடக்க வேண்டும் எனவும் அப்படி செய்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு நிறைய வழிகாட்டல்களும், நெறிமுறைகளும் உள்ளது என கூறியிருக்கிறார்.
மேலும், அரசு சிலருக்கு இந்த அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்துக் கொள்ள வழி கொடுக்கப்படுமாம். இந்த சிகிச்சைகளை பாதுகாப்பான இடங்களில் செய்துக் கொண்டால் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் மனம் திறந்து கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்ட ரசிகர்கள் இவர் இவ்வளவு ஓபனாக பேசுகிறாரே என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.