என்னுடைய முதல் மாணவன்- கண்ணீருடன் கலா மாஸ்டர் வெளியிட்ட காணொளி
“என்னுடைய முதல் மாணவன் அவர்..” என கலா மாஸ்டர் கண்ணீருடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஷிஹான் ஹூசைனி
கே. பாலசந்தரின் இயக்கத்தில் கடந்த 1986ம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறியப்பட்டவர் தான் நடிகர் ஷிஹான் ஹூசைனி.
இவர், விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்திலும் நடித்து இருந்தார்.
அதன் பின்னர், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார்.
மதுரையை சேர்ந்த பிரபல கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹூசைனி, 300க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியளித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
அவர் கடைசியாக கேட்டதை செய்து விட்டேன்..
இது குறித்து பேசிய கலா மாஸ்டர்,“ இன்றைய தினம் காலையில் எழுந்தவுடன் அவர் இறந்து விட்டார் என்பது செய்தி அறிந்து கவலையாக உள்ளது. அவர் என்னுடைய மாணவன். ஆரம்ப காலங்களில் எனக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார்.
அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது நான் சென்று பாரப்பதற்கு கேட்ட போது தொற்று ஏற்பட்டு விடும் என பயந்து அவர், என்னை பார்க்க அனுமதிக்கவில்லை.
ஆனாலும் அவருக்காக நான் இறைவனிடம் பிராத்தணை செய்துக் கொண்டிருந்தேன்.. நான் உங்களுக்காக நீங்கள் கடைசியாக கேட்டதை செய்தேன். மிஸ் யூ..” எனக் கண்ணீருடன் பேசியிருக்கிறார்.
இந்த காணொளி தற்போது இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. அத்துடன், பிரபலங்கள் பலர் அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
