புற்றுநோயுடன் போராடிய நடிகர் ஷிஹான் ஹூசைனி மரணம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அவஸ்தைப்பட்டு வந்த நடிகர் ஷிஹான் ஹூசைனி காலமானார்.
நடிகர் ஷிஹான் ஹூசைனி
கே. பாலசந்தரின் இயக்கத்தில் கடந்த 1986ம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறியப்பட்டவர் தான் நடிகர் ஷிஹான் ஹூசைனி.
இவர், விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்திலும் நடித்து இருந்தார்.
அதன் பின்னர், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார்.
மதுரையை சேர்ந்த பிரபல கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹூசைனி, 300க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியளித்து வந்துள்ளார்.
காலமானார்..
கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இவர் சிகிச்சைக்காக தமிழ்நாடு அரசு இவருக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக ரூ.5. லட்சம் உதவி வழங்கியது.
இதனை தொடர்ந்து, 3 வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை கொடுக்கபட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நடிகர் அவருடைய உடலை தானம் செய்ய விரும்புவதாகவும் அறிவுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |