அரணை என்கிற பல்லி இனம் விஷம் கொண்டதா?
அரணை (skink) என்பது சின்சிடே (Scincidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பல்லி இன ஓந்திகளாகும் இவை வறண்ட இடங்களில் வசிக்கக் கூடிய உயிரினமாக இருப்பதால் கோடைக்காலங்களில் அதிகமாக பார்க்கலாம்.
இரவு வேளைகளில் கற்களுக்கு அடியிலோ, பொந்துகளிலோ நுழைந்து கொள்ளும்.
நீண்ட குளிர்காலங்களில் பொந்துகளில் நுழைந்து கொண்டு நுழைவுப் பகுதியை பாசியால் அடைத்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்தை தொடங்கி விடும். அடுத்து பூமியில் வெப்பம் பட்டு, நிலம் சூடாகி, அந்த புழுக்கம் உள்ளே தாக்கும் வரை தூங்கிக் கொண்டிருக்கும்.
கோடைக்காலம் வந்தவுடன் தோலை அடிக்கடி உரித்து விட்டு சூழலில் சுற்றித்திரியும் பழக்கம் கொண்டது. அரணை தன் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாக்க உரிய நேரத்தில் தனது வாலினை ஒடித்துவிட்டு ஓடி ஒழியும்.
ஆபத்தான நேரங்களில் முறிந்துபோன வால் சில நாட்களில் வளர்ந்துவிடும். நமக்கு நகம் போல, அரணைக்கு வால் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருக்கும்.
இப்படி அரனையில் இருக்கும் சிறப்பம்சங்களையும், அதில் விஷம் உள்ளதா? என்பதனை எமது பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
