எமிஜாக்சனுக்கு குழந்தை பிறந்தாச்சு.. பெயருடன் அறிவித்த கணவர்
“ஐ” திரைப்பட நடிகை எமிஜாக்சனுக்கு குழந்தை பிறந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகி வருகிறது.
நடிகை எமிஜாக்சன்
மதராச பட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறியப்பட்டவர் தான் நடிகை எமிஜாக்சன்.
இதனை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியாகிய திரைப்படத்திலும் நாயகியாக கலக்கியிருப்பார்.
இவர், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இதற்கிடையில், இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை எமிஜாக்சன் காதலித்து வந்தார். அவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ”ஆண்ட்ரியாஸ்” என பெயரிட்டனர்.
குழந்தை பிறந்தவுடன் பெயர் வைத்த கணவர்
இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
இதனை தொடர்ந்து, எமிஜாக்சன் பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட்விக்கை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மீண்டும் கர்ப்பமான எமிஜாக்சன் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
இப்படியொரு சமயத்தில் எமிஜாக்சனுக்கு இன்றைய தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக எட்வெஸ்ட்விக் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில், “ஆஸ்கர் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் உன்னை இந்த உலகத்துக்கு வரவேற்கிறேன்..” என குறிப்பிட்டிருக்கிறார்.
மகன் பிறந்தவுடன் பெயருடன் அறிமுகம் செய்ததை பார்த்த இணையவாசிகள் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |



