நல்ல தர்பூசணி பழம் எப்படி இருக்கும் தெரியுமா? இப்படித் தான் பார்த்து வாங்கனும்
தர்பூசணி பழம் வாங்கும் போது எந்தெந்த விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தர்பூசணி
கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே தர்பூசணியின் வியாபாராமும் அதிகரிக்கத் தொடங்கிவிடும். மக்களும் தர்பூசணியை அதிகமாக விரும்பி சாப்பிட்டு வருகின்றார்.
ஆனால் சமீப காலத்தில் தர்பூசணியினை அதிக சுவையுடனும், சீக்கிரமாக பழுக்க வைப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் எலி, பெருச்சாளி இவைகள் கடித்த பழத்தினையும் கடைக்காரர்கள் விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது.
இதனால் மக்கள் தர்பூசணி பழத்தை வாங்கி சாப்பிடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ரசாயனங்கள் கலக்காத நல்ல பழங்களை எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எவ்வாறு பார்த்து வாங்குவது?
பொதுவாக நல்ல தர்பூசணி பழங்கள் சிறிது மஞ்சள் கலந்த புள்ளிகளுடனும், கனமாகவும் இருக்கும். அது மட்டுமின்றி நன்றாக பழுத்த பழத்தில் உள்ள பச்சைக் கோடுகள் விரல் அளவி விரிந்து காணப்படுகின்றது. இதே மெலிந்த கோடுகளைக் கொண்ட பழங்கள் இனிப்பு சுவை குறைவாக இருக்குமாம்.
தர்பூசணியின் தண்டுப்பகுதியை வைத்து அதன் சுவையை அறிந்து கொள்ளலாம். பழமும் கொடியும் இணையும் தண்டு பகுதி சிறியதாகவும், பள்ளமாகவும் இருந்தால் நல்ல இனிப்பு சுவையுடன் இருக்கும். குறித்த இடத்தில் இவ்வாறாக இல்லாமல் ஈரப்பதமாகவோ, பெரியதாகவோ இருந்தால் அது சரியாக பழுக்காதது அல்லது அதிகமாக பழுத்துவிட்டது என்று அர்த்தமாம்.
தர்பூசணியை தட்டினால் டொக் என கனீர் சத்தம் வரும். அதில் எங்குமே துளைகள் இல்லாமல் இருக்கிறதா? என பார்த்து வாங்க வேண்டும்.
பெரிய பழத்தை தூக்கிப் பார்த்தால் இலகுவாக இருந்தால், நீர்ச்சத்து மற்றும் சுவை குறைவாக இருக்கும். அதுவே சிறிய பழமாக இருந்தாலும் நல்ல கனமாக இருந்தால் நீர்ச்சத்து, சுவை நன்றாகவே இருக்குமாம்.
தர்பூசணியில் அடிப்பகுதியில் மஞ்சள் வண்ண புள்ளிகள் காணப்பட்டால் அது வயலில் பழுத்த பழமாகும். அதுவே வெள்ளை அல்லது பச்சை நிறத்தில் புள்ளிகள் காணப்பட்டால் நன்றாக பழுக்கவில்லை என்று அர்த்தமாம்.
சில இடங்களில் மஞ்சள் நிற புள்ளிகளுக்கு இடையே வெள்ளை நிற புள்ளி தெரிந்தால், அவை ஊசி போட்டு பழுக்க வைப்படுகின்றது என்று அர்த்தம்.
அதே போன்று தர்பூசணியில் எங்குமே துளைகள் இல்லாமல் இருப்பதை பார்த்து வாங்கவும். துளைகள் இருப்பது ஊசி போட்ட அறிகுறியாக கூட இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
