குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு இருக்கா? அப்போ இந்த பழக்கங்களை கைவிடுங்க
இதய நோய் என்பது தீவிர நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நோய் உலகில் உள்ளவர்களில் பலருக்கு உள்ளது.
இதய நோயாளர்கள் சில காரணிகளால் அடுத்த பரம்பரைக்கும் கடத்தப்படுகிறது. உணவு முறைகள் மற்றும் வேறு சில பழக்கங்களினால் இதய நோய் எற்படுகிறது.
இவற்றை எல்லாம் விட சிலருக்கு மரபணுக்கள் வாயிலாகவும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களின் தீய பழக்கங்களை கட்டுக்குள் வைப்பது சிறந்தது.
நீங்கள் செய்யும் சில தேவையற்ற வேலைகளால் நமது பரம்பரையில் வரும் இன்னொருவர் பாதிக்கப்படுகிறார் என்பதனை நாம் ஒவ்வொரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இதயம் சார்ந்த நோய்களை கட்டுக்குள் வைப்பதற்கு என்ன மாதிரியான பழக்கங்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
கட்டுப்படுத்த வேண்டிய பழக்கங்கள்
1. சுடுநீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிப்பவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனின் செரிமானத்திற்கு தேவையான பழக்கம் என பலரும் தொடர்ந்து செய்து வருகுிறார்கள். இது ஒருவரின் ரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
2. நிறைய பேருக்கு உணவு உண்ட பின்னர் இனிப்பு வகைகள் சாப்பிடுவார்கள். இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு திடீர் என சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படும். ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். இதனால் இதயம் சார்ந்த நோய்கள் வரலாம்.
3. குடும்பத்தில் இதய நோய் வரலாற்றை கொண்டவர்களுக்கு பொதுவான ஒரு பழக்கம் இருக்கும். அதாவது அவர்கள் இரவு உணவை கொஞ்சம் தாமதமாக சாப்பிடுவார்கள். இப்படி தொடர்ந்து சாப்பிடும் ஒருவருக்கு செரிமானத்தில் இடையூறை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். ட்ரைகிளிசரைடுகளின் அளவும் உயரும்.
4. ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலைப் பார்க்கும் பொழுது ரத்த ஓட்டத்தில் தாக்கம் ஏற்படும். இதனால் இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மாரடைப்பு உள்ளவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனின் தமனிகளில் கொழுப்புக்கள் தேங்க செய்து, பெருந்தமனி தடிப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரித்து விடும்.
5. இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தாலோ அல்லது போதுமான தூக்கத்தை ஒருவர் பெறாமல் இருந்தாலோ அவர்களுக்கு மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரித்து இதயம் சார்ந்த நோய்கள் வரலாம்.நாளடைவில் மாரடைப்பு கூட ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
