பார்ட்டியில் தொலைத்த ஐபோனை டெலிவரி போய் கொண்டு வந்த அதிசயம்! திருடியது யார்?
வருத்தபடாத வாலிப சங்க திரைபட நடிகையின் செல்போன் புகார் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் கொண்ட ஆர்வத்தினால் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமாகியவர் தான் நடிகை ஷாலு சம்மு.
இவர் நடிகை சிவகார்த்திகேயனின் “ வருத்தப்படாத வாலிப சங்கம்” என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் பள்ளி மாணவியாக நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் அவ்வப்போது வந்து செல்வார்.
மேலும் தற்போது இவருக்கான படவாய்ப்பு பெரியளவில் இல்லை என்பதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருவதை வாடிக்கையாக செய்து வருகிறார்.
காணாமல் போன ஐபோன் பெறுமதி
நடிகையின் செல்போன் கடந்த தினங்களில் காணாமல் போயுள்ளது. இந்த ஐபோன் சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதி என்பதால் பதறிப்படி பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவருக்கு சமிபத்தில் ஒரு பார்ஷல் வந்துள்ளது. அதில் காணாமல் போன ஐபோன் வந்துள்ளது.
இவரின் யார் இந்த போனை திருடி இருப்பார் என தீர்மாணித்திருந்தாரோ அவர் தான் திருடியிருக்கிறார் எனவும் தற்போது நட்பு இல்லை எனவும் கூறியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், "ஒரு செல்போனை கூட சரியாக பார்த்து கொள்ளாமல் தொலைத்து விட்டு, இதற்கு ஏன் இந்த விளக்கம்" என கலாய்க்கும் வகையில் இணையவாசிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.