இந்தியாவிற்கே வழிகாட்டியாக மாறிய சாதி(தீ)யற்ற ஒரே கிராமம்! எதுன்னு தெரியுமா?
உலகளாவிய ரீதியில், இனம், மதம், மொழி, சாதி, கலாசாரம், நிறம் என பல்வேறு பிரிவினைகளால் நாடுகளுக்கு இடையில் போர் இடம்பெற்றுவரும் நிலையில், மனிதநேயம் தான் எல்லாவற்றையும் விட முக்கியம் என இந்தியாவில் ஒரு கிராமம் தன்னை சாதியற்ற கிராமமாக அறிவித்துள்ளது இந்தியாவுக்கே சிறந்த முன்னுதாரணமாக மாறியள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் (அஹில்யானகர்) மாவட்டத்தில் உள்ள சவுண்டாலா (Soundala) கிராமம், பிப்ரவரி 5, 2026 அன்று அதிகாரப்பூர்வமாகத் தன்னை இந்தியாவின் முதல் 'சாதியற்ற கிராமம்' என அறிவித்துள்ளது.

எனது சாதி- மனிதநேயம்
பல வருடங்களாகவே முற்போக்கு சிந்தனை கொண்ட கிராமமாக பல்வேறு விடயங்களிலும் சமத்துவத்தை கடைப்பிடித்து வரும் குறித்த கிராததானது தற்போது கிராம சபையின் முறையான ஒப்புதலுடன்,"அம்சி ஜாத்.மானவ்" (எனது சாதி மனிதநேயம்) என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டு தன்னை சாதி இல்லாத கிராமமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் மகாராஷ்டிராவில் மாத்திரமன்றி இந்தியாவிலேயே சாதி இல்லாத ஒரே கிராமாக சவுண்டாலா கிராமம் அடையாளப்படுத்தப்படுகின்றது.

அகமதுநகர் என முன்னர் குறிப்பிடப்பட்ட அஹில்யநகர் மாவட்டத்தின் நெவாசா தாலுகாவில் அமைந்துள்ள சவுண்டாலாவில் கடந்த பிப்ரவரி 5 ஆம் திகதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த கிராம மக்கள் குறிப்பிடுகையில், "இது ஒரு சிறிய முயற்சி, ஆனால் அது நீண்ட தூரம் செல்லும். சவுண்டாலா இப்போது சாதி இல்லாத கிராமமாக மாறியுள்ளது.
பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கூட இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அனைவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கூட்டத்தில், யாரும் சாதியைப் பின்பற்றவோ அல்லது சாதி அடிப்படையிலான நடைமுறைகளில் ஈடுபடவோ கூடாது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டது.நாங்கள் 'அம்சி ஜாத்... மானவ்' மூலம் வழிநடத்தப்படுவோம். மக்கள் மனிதநேயத்தைப் பின்பற்றுவார்கள்.உண்மையில், எங்களுக்கு சாதியில் நம்பிக்கை இல்லை. மனிதநேயம்தான் மிகப்பெரிய சாதி மற்றும் மதம். அனைவரும் சமம்" என தெரிவித்துள்ளனர்.
முற்போக்கான எண்ணங்களை கொள்கைகளாக கொண்ட இந்த கிமராமானது தமிழ்நாட்டைவிட பன்மடங்கு முற்போக்கில் சிறந்து விளங்குகின்றது. சவுண்டாலா கிராம மக்கள் பாலின உணர்திறன், குழந்தை திருமணத்தை தடை செய்தல், கைம்பெண்களின் மறுமணத்தை அனுமதித்தல், குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கை, பெண் கல்வியை ஊக்குவித்தல் மற்றும்அரசியல் செயல்பாட்டில் பெண்கள் பங்கேற்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல முற்போக்கான தீர்மானங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தங்களின் கிராமத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
மேலும், கடந்த 2007ஆம் ஆண்டில் 'எவ்வித மோதலும் இல்லாத கிராமம்' என்ற விருதை சவுண்டாலா கிராமம் பெற்றமையம் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |