நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை கொலை செய்யப்பட்டாரா?
நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை கொலை செய்யப்பட்டு இறந்ததாக பாஜக தலைவரான எச் ராஜா தெரிவித்துள்ளது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைவர் எச் ராஜா சர்ச்சைக்கு பெயர் போனவர், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் எதிர்கட்சிகள் மீதான சர்ச்சைக் கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தி வருகின்றார்.
சமீபத்தில் இவர், ஜெயபிரகாஷ் என்ற ஜெயிலரை, தற்போது பாபநாசம் எம்.எல்.ஏ கொலை செய்ததாகவும், ஜெயபிரகாஷின் மகன் வேறு யாரும் அல்ல நடிகர் சிவகார்த்திகேயன் என்று கூறியுள்ளார்.
இந்த கருத்து அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் இயற்கையானது என்றும் அவரது பெயர் ஜி.தாஸ் என்று தெரியவந்துள்ளது.
சிவா தனது மறைந்த தந்தையுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் என்பதையும், அவரை மிஸ் செய்வதாக பல நேர்காணல்களில் கூறியதையும் ரசிகர்கள் நன்கு அறிந்த நிலையில், இந்த சர்ச்சையான பேச்சு அவரது குடும்பத்திற்கு தேவையற்ற வலியினை ஏற்படுத்தியுள்ளது என்று கூறி ராஜாவை பலரும் கண்டித்து வருகின்றனர்.