Viral Video: பாம்பிற்கு முத்தம் கொடுத்த நபர்... சட்டென திரும்பி பாம்பு கொடுத்த பதிலடி
பாம்பு ஒன்றினை பிடித்துக் கொண்டு நபர் அதற்கு முத்தம் கொடுத்த தருணத்தில் அது திரும்பி அவரைக் கடித்துள்ள காட்சி நடுநடுங்க வைத்துள்ளது.
மனிதருக்கு பாம்பு கொடுத்த முத்தம்
பொதுவாக பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இனங்கள் மனிதர்களை கடிக்கும் போது இறக்கும் நிலைகூட ஏற்படுகின்றது.
ஆனால் பாம்புகளின் வேட்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் நிலையில் இருக்கும். பாம்புகள் தவளை, மற்றொரு பாம்பை வேட்டையாடுவதை நாம் அவதானித்திருப்போம்.'

சிலர் பாம்புகளை பிடித்துக் கொண்டு சுற்றி நிற்பவர்கள் முன்பு கெத்து காட்ட நினைப்பவர்கள். அவ்வாறு கெத்து காட்டி வாங்கி கட்டிய நபரின் காட்சியே இதுவாகும்.
இதில் படமெடுத்த பாம்பினை பிடித்து அதற்கு நபர் முத்தம் கொடுத்துள்ளார். எதிர்பாராத அடுத்த நொடியே பாம்பு திரும்பி அவரது உதட்டில் கடித்துள்ளது. வேறுவழியில்லாமல் பாம்பினை விட்டுவிட்டு நபர் துடிதுடித்துள்ளார். பாம்பும் எஸ்கேப் ஆகியுள்ளது.
இப்படியா மற்றவர்கள் முன்பு பாம்பை வைத்து சீன் போட்டு கடைசியில் கடி வாங்குவது? என்ற கேள்வியே பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |