ஐபோன் ட்ரிக்ஸ்.. இழந்த டேட்டாவை மீட்டெடுப்பது எப்படி?
ஐபோனை என்றால் பலருக்கு அதீத பிரியம் இருக்கும். அப்படிப்பட்ட விலையுர்ந்த ஐபோனை பாதுகாப்பாக வைத்துகொள்வது அவசியம்.
இப்பதிவில், ஐபோன் சாதனத்தில் போனை ரீசெட் செய்தால், மீட்டமைக்கும் வழிமுறை பற்றி தெரிந்துகொள்வோம்.
ஐபோன் 12
ஐபோனில் ஏதாவது சிக்கல் உண்டாகிறதா? இல்லை iOS 15.4 மென்பொருளை அப்டேட் செய்ய விரும்புகிறீர்களா? இந்த இரண்டிலும், உங்கள் ஐபோனை அதன் தொழிற்சாலை அமைப்புகளுக்கு மீட்டமைப்பது iPhone to its factory settings சிறந்ததாக இருக்கலாம்.
இந்த செயல் முறையை தொடங்கும் முன் ஐபோனில் உள்ள முக்கியமான தரவுகள் அனைத்தையும் காப்புப் பிரதி எடுத்துக்கொள்ளுங்கள்.
இல்லையெனில் தேவையான தரவுகளை தொலைத்துவிடலாம். இந்த எளிய வழிகாட்டியை பயன்படுத்தி ஐபோனை ரீசெட் செய்த பிறகு, உங்கள் விருப்பமான ஐபோன் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்.
எவ்வாறு மீட்டமைப்பது
முதலில் ஐபோனை தொழிற்சாலை மீட்டமைக்கும் போது, முதலில் உங்கள் ஆப்பிள் ஐடி-இல் (Apple ID) இருந்து வெளியேற வேண்டும்.
ஐபோனில் உள்ள செட்டிங் (Settings)ஐ திறந்து, பக்கத்தின் மேலே உள்ள உங்கள் பெயர் மற்றும் ஆப்பிள் ஐடியை சொடுக்கவும்.
பின்னர், ஆப்பிள் ஐடி பக்கத்தில் iCloud என்ற தெரிவு இருக்கும். அதை க்ளிக் செய்யவும். அதில் உள்ள "iCloud காப்புப்பிரதி" (iCloud Backup) என்றத் தெரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது எல்லா தகவல்களையும் iCloud இல் காப்புப் பிரதி எடுக்க (Back Up Now) என்ற தெரிவை கிளிக் செய்யவும்.
இந்த செயல்முறை முடிந்ததும், அமைப்புகள்> பெயர் மற்றும் ஆப்பிள் ஐடி> வெளியேறு ( Settings> Name and Apple ID> Sign Out) என்பதற்குச் சென்று உங்கள் ஆப்பிள் ஐடியிலிருந்து வெளியேறவும்.
இதனிடையில் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டியிருக்கலாம். கடவுச்சொல்லை உள்ளிட்டு, Turn Off என்பதை கொடுக்கவும். அமைப்புகள் > பொது > மீட்டமை, பின்னர் அனைத்து உள்ளடக்கம் மற்றும் (Settings > General > Reset > Erase All Content) என்பதை கொடுக்கவும்.
உங்கள் passcode உள்ளிடும்படி கேட்கப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்,
பின்னர் நீங்கள் அனைத்தையும் அழிக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். உறுதிப்படுத்த (Erase) என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஐபோனில் சேமிக்கப்பட்டுள்ள கோப்புகளைப் பொறுத்து செயல்முறை, சில நிமிடங்களை எடுக்கும். இந்த நடைமுறைகள் முடிந்ததும், உங்கள் சாதனம் மறுதொடக்கம் செய்யப்படும்.